தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 april 2015

நியூசிலாந்து கடலில் தத்தளித்த போது இளம் பெண்களால் காப்பாற்றப்பட்ட தமிழ் மாணவர் மரணம்!

ஹொரணையில் கூட்டம்! ஒரே மேடையில் சந்திக்கும் மைத்திரி, சந்திரிகா, மஹிந்த
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 02:35.07 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் எதிர்வரும் 10ம் திகதி ஒரே மேடையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஹொரணையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவினால் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒற்றுமையை விரும்பும் அனைவரும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க மேற்கொண்டு வருகின்றார்.
எதிர்வரும் 10ம் திகதி ஹொரணை நகரில் பிற்பகல் 2.00 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் மைத்திரி, மஹிந்த மற்றும் சந்திரிக்கா தரப்பிலிருந்து எவ்வித கருத்தும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkq7D.html

நியூசிலாந்து கடலில் தத்தளித்த போது இளம் பெண்களால் காப்பாற்றப்பட்ட தமிழ் மாணவர் மரணம்!
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 03:07.59 AM GMT ]
நியூசிலாந்து கடலில் விழுந்து தத்தளித்த போது, இளம் பெண்களால் காப்பாற்றப்பட்ட தமிழ் மாணவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நியூசிலாந்து நாட்டில் பூபேஷ் பழனி (வயது 26) என்ற தமிழ் மாணவர் படித்து வந்தார். கடந்த திங்கட்கிழமை அவர், நியூசிலாந்தில் ஈஸ்ட்போர்ன் என்ற இடத்தில் உள்ள கடலில் விழுந்து தத்தளித்தார்.
அப்போது அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த 15 வயதான கெல்லி மெக்காவ் மற்றும் 16 வயதான பாய்கே ஓல்ட்ஸ் ஆகிய ஒன்றுவிட்ட சகோதரிகள் அவரது அலறல் சத்தத்தை கேட்டனர்.
உடனே, பாய்கே ஓல்ட்ஸ் துணிச்சலாக கடலில் குதித்தார். அவருக்கு கரையில் இருந்து இரண்டு வாலிபர்கள் டார்ச் லைட் அடித்தபடி வழி காட்டினர்.
பாய்கே ஓல்ட்ஸ், மிகவும் ஆழத்தில் நீந்திச் சென்று, பழனியை கண்டுபிடித்தார். அப்போது, பழனி நன்றாக மூழ்கிய நிலையில் கிடந்தார். அவரை பாய்கே மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.
கரையில், பழனிக்கு கெல்லி மெக்காவ் முதலுதவி சிகிச்சை செய்தார். பின்னர், பழனியை வெலிங்டனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பழனி, 5 நாட்கள் கடந்த நிலையில், நேற்று மரணம் அடைந்தார். அப்போது, நண்பர்கள் உடன் இருந்தனர்.
5 நாட்களாக நண்பர்கள் செய்த உதவிக்காக, அவர்களுக்கு பழனியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
பழனி காப்பாற்றப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போது, முதலில் அவரைப் பற்றி எதுவும் தெரியவில்லை.
ஆனால், செய்தி இணையத்தளங்களில் அவரது புகைப்படத்தை பார்த்து விட்டு, ஒருவர் அடையாளம் சொன்னதால், அவரைப் பற்றிய விவரங்கள் தெரிய வந்தன.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkq7J.html

Geen opmerkingen:

Een reactie posten