அமைதி காக்கும் படையினரை இந்தியா வெளியேற்றாவிட்டால் அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோம்
இலங்கையில் நிலைகொள்ள செய்யப்பட்டிருந்த இந்திய என முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ இந்தியாவை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் இந்தியாவின் உயர்ஸ்தானிகர் லக்கான் லால் மெஹ்ரோட்ரா எழுதியுள்ள இலங்கையில் எனது நாட்கள் என்ற புத்தகத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டுகளில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையினர் தொடர்பில்,
1989ம் ஆண்டு பிரதமராக இருந்து ரணசிங்க பிரேமதாஸ, அந்த நாட்களில் இந்தியாவின் சிறப்பு தூதுவராக இருந்த பி. ஜி. தேஸ்முக்கை சந்தித்து, இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
அதன் பின்னர், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜயவர்தனைவை இந்தியாவுக்கு அனுப்பி, மீண்டும் அமைதி காக்கும் படையினரை அகற்றுமாறு வலியுறுத்தி இருந்தார்.
எனினும் படையினர் 1990ம் ஆண்டின் நடுப்பகுதியிலேயே வெளியேற்றப்படும் என இந்திய அரசாங்கம் தெரிவித்திருந்தது. பின்னர் 1991ம் ஆண்டு மே மாதம் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், 1993ம் ஆண்டு மே மாதம் ரணசிங்க பிரேமதாஸவும் தற்கொலைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
|
Geen opmerkingen:
Een reactie posten