தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 16 augustus 2012

சிங்களவருக்கு சமனான உரிமை எம் ஈழத் தமிழருக்கு வேண்டும்! முதல்வர் ஜெயலலிதா (வீடியோ இணைப்பு)!!


சிங்களவருக்கு சமனான உரிமை எம் ஈழத் தமிழருக்கு வேண்டும்! முதல்வர் ஜெயலலிதா (வீடியோ இணைப்பு)

சிங்களர்களுக்கு சமமான உரிமைகளை இலங்கைத் தமிழர்கள் பெறுவதற்கு இனிமேலாவது இலங்கை அரசை வலியுறுத்தி வழிவகை செய்து அவர்களின் துயரை நீக்க வேண்டும்
என இந்தத் தருணத்தில் மத்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இந்திய சுதந்திர தின உரையில் வலியுறுத்தி உள்ளார்.
“இலங்கை முகாம்களில் வாழும் நம் உறவுகளாகிய, தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கும்,தமது வாழ்வை வழம்படுத்திக் கொள்வதற்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” எனவும் முதல்வர் ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் மத்திய அரசிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்வர் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கும் முதன்மை வழங்கியுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னையில் திமுக சார்பில் ரெசோ மாநாடு நடத்தப்பட்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதா ஜெயராமும் சுதந்திர தின உரையில் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கின்றமை முக்கிய விடயமாக கருதப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten