தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 januari 2012

அரைகுறை உயிருடன் தவிக்கும் ஈழ தழிழர் விடுதலையை முழுதாக கொன்று புதைக்க அறிவிலிகள் புது முயற்சி!!

அன்றே அறிவாளிகள் "ஜேயாரிடம் தமிழர் கேட்கும் தனி நாட்டை பிரித்து  கொடுங்கள்.ஒரு வருடத்தில் அவர்களுக்குள் மோதியழிந்திடுவர்,மீண்டும் இணைத்துக்கொள்ளலாம்" என்றனர்.அவ்வளவுக்கு தமிழர் பற்றிய அறிவு அவர்களுக்கு,1987இல் உதவிக்கு வந்த இந்தியாவை திட்டமிட்டு ஈழத்தமிழர் விரோதியாக்கிய பெருமை அதே ஜேயாரையே சாரும்.தமிழனின் தலைக்கனமே அவன் அழிவுக்கு காரணம்."மூடனும் முதலையும் கொண்டது விடா" என்பதில் தமிழனும் என்று சேர்க்க இன்றைய செயற்பாடுகள் ஆதாரமாகும்.சில நாடுகளில் காணப்படும் ஜனநாயக சலுகைகளை இவர்கள் தங்கள் அறிவீனத்தால் இல்லாமல் செய்து அந்த நாட்டு மக்களுக்கும் அநியாயம் செய்வதுடன் தமிழருக்கும் இழிவையும் தாழ்வையும் கொடுப்பதுடன் தற்பெருமை வேறு அடிக்கிறார்கள்.உலகில் இலங்கை தலைகுனிய ராணுவத்தால் எடுக்கப்பட்டு வீடியோ,புகைப்பட ஆதரங்களே காரணம்.சிங்களம் விட்ட தவறே நமக்கு உலகில் அனுதாபம் வர காரணமே அன்றி புலம் பெயர் தமிழரின் செயற்பாடல்ல.சுயலாபத்துக்காக இவர்கள் பிரிந்தழிவதுடன் கிடைக்கக் கூடிய தீர்வுகளையும் இல்லாமல் செய்ய முனைகின்றனர்.புலிகள் கூறிய "புலிகள் அற்ற தீர்வு சாத்தியப்பட விடமாட்டோம்" என்பதை மூட தமிழ் மக்களின் அறியாத்தனத்தால் நிறைவாக்கப்போகிறார்கள்.இவர்களே தமிழரின் கோடரிக் காம்புகள்,எப்போது தமிழர் இதை புரிவது!!நல்ல காலம் எப்போது பிறப்பது????
 
முள்ளிவாய்க்காலிலிருந்து முன்நகர ஆரம்பித்துள்ள தமிழீழ விடுதலைத் தேர்!

woensdag 4 januari 2012

ஐ.நாவிடம் உள்ள போர்க்குற்ற ஆதாரங்களை அபகரிக்க சிறிலங்கா முயற்சி



தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இருகண்களும் போக நினைப்பானாம் கெட்டவன் ,தனக்கு இருகண்களும் போனபின் எதிரிக்கு ஒருகண்ணையாவது பறிக்க பிரயாசைப்படுகிறான் புலித்தமிழன்.


துரியோதனனிடம் தூது சென்ற கிருஸ்ணாவும்! இலங்கைக்கு வரும் எஸ்.எம்.கிருஸ்ணாவும்!
[ புதன்கிழமை, 04 சனவரி 2012, 07:57.24 AM GMT ]
குருஷேத்திரப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக கிருஸ்ண பரமாத்மா துரியோதனனிடம் தூது செல்கிறார். துரியோதனனிடம் தூது சென்ற அந்த கிருஸ்ணனின் நோக்கம் போரை நிறுத்துவதல்ல. மாறாக போரை நடத்தி பாண்டவருக்கு உரிமையைப் பெற்றுக் கொடுப்பதே அவரின் இலக்காக இருந்தது.
அதற்காக கிருஸ்ணன் செய்த இராஜதந்திரங்கள் ஏராளம். போரைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாண்டவர் சபை ஆராய்கிறது. எங்கள் தமிழ் அரசியல் தரப்புகள் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து - அறிக்கை.
சகாதேவன் மட்டும் போரை நிறுத்துவதற்கான வழியைத் தெரிந்து கொள்கிறான். போரை நிறுத்துவதற்கான உபாயம் என்ன என்பதை போரின் சூத்திரதாரியான கிருஸ்ணனிடமே கூறிவிடுகின்றான்.
போரை நடத்துவதை உள்நோக்கமாகக் கொண்ட கிருஸ்ணன் குருஷேத்திரத்தில் பார்த்தனுக்கு சாரதியாக இருந்து பகவத் கீதையையும் தந்து, போரையும் நடத்தி முடித்தான்.
அந்த கிருஸ்ணா; உரிமை மறுக்கப்பட்ட பாண்டவர்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்காக துரியோதனனிடம் தூது சென்றார்.
ஆனால் இங்கோ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா இலங்கைக்கு வருகிறார். அவரின் வருகை தமிழர்களுக்கு உரிமை பெற்றுக் கொடுப்பதற்காக அல்ல.
மாறாக வன்னி யுத்தத்தில் எல்லாவற்றையும் இழந்து இடம்பெயர்ந்து மீளக்குடியமரும் குடும்பங்களுக்கு இந்திய அரசினால் அமைத்துக் கொடுக்கப்படும் வீடுகளை கையளிப்பதற்காகவே இவர் வருவதாகக் கூறப்படுகின்றது.
ஓ! கிருஸ்ணா என்றாலே பிரச்சினை போல் தான் தெரிகிறது. போரை நடத்தி, கர்ணனை வீழ்த்தி அவன் உயிரை பறிப்பதற்காக அந்தணர் வேடம் தாங்கி கர்ணன் செய்த புண்ணியப் பேற்றை உதிரத்தின் வழி பெற்ற கிருஸ்ண நாமம் அங்கே.
இங்கோ, இலங்கை அரசு வன்னியில் போரை முன்னெடுப்பதற்கான அத்தனை உதவிகளையும் புரிந்து, போர்க்களத்தில் சிக்குண்ட தமிழ் மக்களை காப்பாற்றுவதைக் கூடத் தவிர்த்து மெளனம் காத்து நாடகம் நடித்த இந்திய அரசு இப்போது வீடு கட்டிக் கொடுக்கிறது. அந்த வீட்டைக் கையளிக்க எஸ்.எம்.கிருஸ்ணா இங்கே வருகிறார்.
வீட்டைக் கையளிக்க மட்டும்தான் வருகிறாரா? அல்லது இலங்கை அரசு சீனாவோடு சேர்ந்து இந்தியாவை ஆபத்துக்குள் வீழ்த்திவிடும் என்ற அச்சத்தில் வருகிறாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஆனால், இவ்விடத்தில் இந்திய தேசத்திடம் பெற வேண்டிய உதவிகளைப் பெற்று வன்னிப் போரில் வெற்றியும் பெற்று அதற்குப்பின் இந்தியாவை உதறித் தள்ளி சீனாவுடன் நட்புறவை ஏற்படுத்தி இந்தியாவை கெஞ்சவைக்கும் பெருமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உண்டு என்பதை மறுத்துவிட முடியாது.
எஸ்.எம்.கிருஸ்ணா அல்ல எவர் வந்தாலும் இலங்கை - சீன நட்புறவை தடுக்கவே முடியாது.
ஆக, ஈழத் தமிழருக்கு இந்தியா இழைத்தவற்றுக்கான தண்டனையை இலங்கை அரசிடம் இருந்தே இந்தியா அனுபவிக்கப் போகிறது என்பதை நினைக்கும் போது, ஹரே கிருஸ்ணா! ஹரே கிருஸ்ணா! எஸ்.எம். கிருஸ்ணா என்றுதான் பாடத் தோன்றுகிறது.
வலம்புரி நாளிதழ் ஆசிரியர் தலையங்கம்

தற்புகழ்ச்சி!!


இலங்கைக்கு ருத்ரகுமாரன் போட்ட குண்டு! ஓடித் திரியும் இலங்கை அரசு! வென்ற தமிழீழ அரசு!

புலியென மக்களிடம் பணம் சம்பாதிக்க பண்ணும் தந்திரமும் சாகசங்களும்!!



1974 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள் ஒரு மீளாய்வு!!

வருத்தத்தின் பின்னரும் திருத்தத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை!‏