தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 januari 2012

வருத்தத்தின் பின்னரும் திருத்தத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை!‏


புலிகளின் தலமையினாலும், அவர்களை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினராலும் மக்கள் பாரியளவில் துன்பங்களையும், அழிவுகளையும் எதிர்கொண்டார்கள். அந்த வருத்தங்களின் பின்னரும் அவர்களின் நடவடிக்கைகளில் திருந்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை!

தகுதியான தலமை இல்லாமையினால் தகுதியற்ற தலமையினை தமிழர்கள் ஏற்றுகொள்ள வேண்டிதாயிற்று (The absence of qualified leadership we have agreed vain leadership).
உலகெங்கும் பரந்து வாழும் எம்மின மக்கள் அனைவருக்கும் அர்ச்சுணனின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எங்கள் எல்லோரினது மூளைகளும் எப்போதும் ஏதாவது ஒன்றினை சித்தித்து கொண்டே இருக்கின்றது. எவரும் சிந்திக்காது இருப்பதில்லை. ஆனால் தாம் சிந்தித்தவைகளில் இருந்த தனித்தன்மையினை உணர்ந்து கொண்டு, அவைகளை தாம் சார்ந்த சமூகத்திற்கும் உலகிக்கு கூறியவர்களே மகான் களாகவும், அறிஞர்களாகவும், புரட்சி தலைவர்களாகும், மகாத்மாக்களாகவும் உருவாக்கம் பெற்றார்கள். இவர்கள் அளவிற்கு புதிய சிந்தனைகளை உலகிற்கு கூற முடியாது போனாலும் குறைந்த பட்சம் எமது சமூகத்தினை ஒரு ஆரோக்கியமான, மனிதநேயம் கொண்ட சமூகமாக மாற்றுவதற்கு உதவுவதோடு, உலக வளர்ச்சிகளுக்கு ஏற்ப எமது இனத்தினை உயர்த்தி செல்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். ஆயுத கலாச்சாரம் எமது சமுகத்தின் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பமானதில் இருந்து எமது சிந்தனைகளிலும் , நடைமுறைகளிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டு வந்திருப்பதினை நாம் பார்க்கலாம். ஆற்றல், அரசியல் அறிவு, ஆளுமைதிறன் (Effective command), தொலைநோக்கு பார்வை, தீர்க்க தரிசனம் என்பன அற்றவர்களை தலைவராக ஏற்றுக்கொள்வதும், அவர்கள் உலக வல்லரசுகளுக்கு எதிராக போராடி எமக்கு விடுதலை பெற்று தருவார் என்று நம்புவதும், ஒரு தனிமனிதன் மீது அதி தீவிர நம்பிக்கை கொள்வது போன்ற நடைமுறைகள் எமது ஈழத் தமிழ் சமூகத்தின் பெரும் பகுதியினரிடம் பற்றிக்கொண்டு இருப்பதினை பார்க்க கூடியதாக உள்ளது.
ஈழத் தமிழ் மக்கள் சார்பாக பேசும் உரிமை தமக்கு மட்டுமே உரித்தானது என்று உரிமை கொண்டாடியதோடு தமிழர் தரப்பில் இருந்த விடுதலை இயக்கங்கள் , புத்தி ஜீவிகள், கல்விமான்கள் , சிந்தனை திறன் கொண்டவர்கள் போன்றோரை எல்லாம் அழித்தொழித்துவிட்டு இறுதியில், லட்சக்கணக்கான மக்களை தமக்கு பாதுகாப்பாக மனித கெடயங்களாக புலிகள் பாவித்து இருந்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களை பலிகொடுத்துவிட்டு, சரண் அடைவதின்மூலம் தாம் தப்பிக்கொள்ளலாம் என்று நட்பாசையில் புலிகளின் தலமை சரண் அடைந்தது. இதன் பின்னர் பல்வகைப்பட்ட துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த துன்பகரமான வருதங்கங்களை பார்த்த பின்னராவது ஏஞ்சியிருக்கின்ற புலம் பெயர்ந்த புலிகள் திருந்தியிருக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, அங்கவீனர்களாகி , அகதிகாளாகி எதிரியிடம் அடிமைப்பட்டு , அரசியல் அந்தஸ்து இல்லாது நடைப்பிணங்களாக அல்லாடிக் கொண்டிருப்பதினை பார்த்த பின்னராவது இவர்களுக்கு வருத்தம் வந்து திருத்தம் பெற்று இருக்கவேண்டும். இவ்வளவு மக்கள் அழிவதற்கு காரணமாக இருந்துவிட்டோமே என்று வருந்திருயிருக்கவேண்டும். இதன் பின்னராவது திருந்தியிருக்கவேண்டும். ஆனால் அவ்வகையான மாற்றங்கள் ஏதேனும் அவர்களிடத்தே வந்தாக தெரியவில்லை. பாரிய அழிவுகளை மக்களுக்கு ஏற்படுத்திவிட்டு தலமையும் அழிந்து போனதின் பின்னராவது புலிகளின் செயற்பாட்டாளர்கள் திருந்தி இருக்கின்றார்களா என்றால்! அப்படியாக அவர்களின் செயற்பாடுகள் தெரியவில்லை.
நாடுகடந்த தமிழீழ அரசு கட்சிக்காரர்களாகட்டும், பல பிரிவுகளாக குலைந்து பிளவுண்டு இருக்கின்ற புலிக் குழுக்களாகட்டும், திருந்தி இருக்கின்றார்களா என்றால் அது எள்ளழவும் நிகழவில்லை. நாம் தனித்து நின்று தமிழ் ஈழ காண்போம் என்று முரசு கொட்டி முடிந்து போனதின் பின்னராவது ஏனைய தமிழ் கட்சிகளோடு கருத்துக்களை பரிமாறவேண்டும் என்ற எண்ணம் எந்த புலி குழுக்களுக்கும் ஏற்படவில்லை, நாடு கடந்த அரசினால் நாலு அடி நிலத்தை கூட காப்பாற்ற முடியாது என்பது வெள்ளிடமலை என்றாலும், அவ் வகையான நகர்வுகளை மேற்கொளவதற்கு முன்னராக ஏனைய தமிழ் தரப்புக்களோடு எனியாவது நாம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று நினைத்தார்களா? அவர்கள் அந்த அரசு அமைப்பது குறித்து ஏதாவது ஒரு தமிழ் தரப்புடன் பெசினார்களா? எனியாவது நாம் எல்லோரினது கருத்துக்களை செவிமடுத்து , இருக்கின்ற மக்களையும், பிரதேசங்களையும் காப்பாற்றுவதற்கு பன்முக தன்மையோடு நாம் செயற்படவேண்டும் என்று சிந்தித்தார்களா? இல்லை. ஏனெனில் இவர்களுக்கு உண்மையிலேயே எமது மக்களுக்கு விடிவு கிடைக்கவேண்டும் என்பதில் ஒரு துளியும் அக்கறை இல்லை. அப்படி அக்கறை இருக்குமானால் ஒரு நிரத்தர அர்சியல் தீர்வு கிடைக்கும் வரையில் எமது மண்ணையும் மக்களையும் பாதுகாக்கதக்க வகையிலான முறைகளை , பன்முக தன்மையோடு மேற்கொள்ள வேண்டும் என்று சிந்த்தித்து இருப்பார்கள். புலிகளில் இருந்து மூன்றிற்கு மேற்பட்ட குழுக்களாக பிளவுண்டு போயிருக்கின்றவர்களில் ஒரு குழுவினராவது ஏனைய தமிழ் கட்சிகளோடு சேர்ந்து தமிழ் மக்களின் எதிர்கால நிலை குறித்து ஆராய வேண்டும் என்று சிந்திக்கவில்லை. எம்மால் தமிழ் ஈழத்தினை பெற முடியும் என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களின் தலமையையும், தலைவிதியை எமது கைகளில் வலுக்கட்டாயமாக எடுத்துக்கொண்ட நாம், முப்பது ஆயிரம் அப்பாவி மக்கள், நாப்பதாயிரம் புலி போராளிகள் என பல்லாயிரக்கணக்கானோரை பலி கொடுத்தோமே, ஆயிரக்கணக்கான மாற்று இயக்க போராளிகள், தமிழ் தலைவர்கள் ஆகியோரை படுகொலை செய்து தமிழ் தரப்பை பலவீனமாக்கினோமே ஜெனியாவது மாற்று கருத்துக்களை செவிமடுப்போம் என்ற சிந்தனை அவர்களுக்கு ஏற்பட்டதா?, தாமே அடுத்த கட்ட புலிகளின் தலமை என்று போட்டி போட்டுக் கொண்டிருப்பவர்களில் எவராவது இவ்வண்ணம் சிந்தித்தார்களா? விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஆதரவாளர்கள் மட்டுமே புலி தலைவர்களின் மாபெரும் தவறுகளை ஏற்றுக்கொண்டு இருக்கின்றார்கள்.
இத்தனை ஆயிரம் தமிழ் மக்களின் அழிவிற்கும், அவர்கள் பட்டஅவலங்களுக்கும் நாமே காரணமாக இருந்திருக்கின்றோம், ஆகவே நாம் அடுத்தாக எடுத்து வைக்கும் அடிகள் ஒன்வொன்றும் அவதனானமாக, ஆழ்ந்த சிந்தனை கொண்ட அடிகளாக இருக்கவேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கவேண்டும் , அதற்கு மாறாக தொடர்ந்தும் மக்களுக்கு பொய்யுரைத்து தலைவர் மீண்டும் வருவார், தமிழ் ஈழம் எடுத்து தருவார் என்று கூறிக்கொண்டு தமது வியாபாரத்தினை தொடர்ந்து நடத்தும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களை விமர்சிக்க வேண்டும் ஏன்றோ, குற்றம் காணவேண்டும் என்பதற்காகவோ நான் இதனை இங்கே கூறவில்லை. இத்தனை அழிவுகளை எதிர் கொண்ட எமது மக்களின் இருப்பினை இல்லாது செய்வதற்கான செயல்களை தற்போதைய அரசு திட்டமிட்டு நடத்திக்கொண்டு இருக்கையில் இன்னமும் நாம் தான் தமிழ்மக்களுக்கு தலமை கொடுப்போம், எம்மோடு இணையாதவர்கள் தமிழின விரோதிகள் என்று கூறிகொள்வதினை சகித்துக்கொள்ள முடியவில்லை, தலைவரின் தீர்க்க தரிசனம் என்று இன்னமும் எழுதுவதினை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை, தலைவரின் தீர்க்கதரிசனம் என்ன தமிழர்களை அழிப்பதா?
இருபது வருடத்திற்குள் குறிப்பாக யாழ் குடாநாட்டில் தமிழர்களை சிறுபான்மையினராக்கும் திட்டத்தினோடு தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்றது. தென்பகுதியில் இருந்து வருபவர்கள் வடக்கே அதிக விலை கொடுத்து காணிகளை வாங்குகின்றார்கள், கவனிப்பார் அற்று இருக்கும் காணிகள் அரச உடமையாக்கப்படுகின்றது, ஏக்கர் கணக்கான காணிகள் படையினருகென ஒதுக்கப்படுகின்றது, இந்த நிலங்களில் அவர்களின் குடுபங்கள் குடியேற போகின்றார்கள்,
இந்த நிலமையிலும் புலி குழுக்களுக்கிடையே மோதல்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இடையே காய்நகர்த்தல்களும் நடைபெறுவதினை மட்டுமே காணக்கூடியதாக உள்ளது.
தயவு செய்து கற்பனை உலகில் இருந்து நிஜ உலகிற்கு வாருங்கங்கள், தைப்பொங்கலுக்கு தமிழ் ஈழம், ஐ நாவில் எதித்திரியா எங்களுக்கான தமிழ் ஈழத்தினை அங்கீகரிக்கப்போகின்றது, எனிவரும் எங்களது போராட்டம் இதை விட உக்கிரமாக இருக்கும், முல்லிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம், அமெரிக்க ராஜங்க செயலரை சந்தித்தோம் , என்ற கதைகளை எனிமேல் விட்டு விடுங்கள், எஞ்சியிருக்கும் எமது இனத்தையும், பிரதேசங்களை எப்படி பாதுகாக்கலாம் என்பதினை எல்லோரும் இணைந்து ஆலோசித்து ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களை மேற்கொள்வோம்,
நாடுகடந்த அரசின் பிரமதரும், அமைச்சர்களும் அவ்வப்போது விடும் அறிக்கைகளை வாசிக்கும் போது தமிழர்களாகிய எங்களுக்கே சிரிப்பு வருகின்றது என்றால் சிங்களவன் உங்களை பார்த்து எப்படி சிரிப்பான் என்று சிந்தித்து பார்த்தீர்களா. நானே பல வாரங்கள் பொறுத்து பார்த்துவிட்டு பொறுமை இழந்த பின்னரெ இவ்வாறு எழுதுகின்றேன். ஐ நாவில் பார்வையாளர் அந்தஸ்து பெற்று இருக்கின்ற பலஸ்தீனிய அதிகாரம் உறுப்புரிமையை கோரிய போது 127 நாடுகள் ஆதரித்தும் அது முடியாமல் போயிருக்கும் நிலையில் நாடுகடந்த அரசினை எந்த நாடும் அங்கீகரிக்காத நிலையில் இதனை வைத்து என்ன செய்ய முடியும் . அவர்கள் தமிழ்மக்களை வைத்து செய்யும் வியாபாரத்தினை மட்டுமே தொடர்ந்து நடத்தலாம்.
புலம் பெயர்ந்த மக்களே, உங்கள் புத்தியை பெயர்த்துவிடாதீர்கள், ஐ நா உட்பட , அனைத்து உலகும் பிரபாகரனும் ஏனைய புலிகளின் தலமையும் கொல்லப்பட்டு விட்டது என்பதினை உறுதிப்படுத்தி இருக்கும் போது, இன்னமும் அவர்கள் திரும்பி வருவார்கள் என்று புலிகளின் குழுக்கள் கூறி வியாபாரம் செய்வதினை நீங்கள் நம்பூவீர்கள் ஆயின் உங்களை விட இந்த உலகில்

Geen opmerkingen:

Een reactie posten