தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 januari 2012

கள்ள கிரெடிட் கார்டில் இலங்கையில் ஹோட்டல் கட்ட முற்படும் நபர் ?


12 January, 2012 by admin


சமீபத்தில் திருகோணமலையில் வைத்து பிரித்தானியப் பிரஜை ஒருவர் சுடப்பட்டார் எனச் செய்திகள் வெளியாகியிருந்தது யாவரும் அறிந்ததே. இவர் உயிர்பிழைத்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார் என அதிர்வு இணையம் அறிகிறது. கந்தையா இராஜகோபால் எனப்படும் இந் நபர் பிரித்தானியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் பல கிரெடிட் காட் மோசடிகளில் இவர் நேரடியாகச் சம்பந்தப்பட்டும் உள்ளார் என அவரின் வர்த்தக நிலையத்தில் முன்னர் வேலைசெய்த ஊழியர் ஒருவர் அதிர்வுக்குத் தெரிவித்தார். கந்தையாவின் சகோதரர் கோணேஸ். இவர் சுவிஸ் நாட்டில் வர்த்தகத்தில் ஈடுபட்டுவருவதும் அடிக்கடி இலங்கை சென்று இராணுவத்தினருக்கு பல தகவல்களை வழங்கி வருவதாகவும் சுவிஸ் நாட்டு மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறு இருக்க இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது புகைப்பட ஆதாரங்களும் வெளியாகியுள்ளது. கந்தையா ராஜகோபால் அவர்கள் சமீபத்தில் திருகோணமலை சென்று அங்கே பல கோடி ரூபா செலவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றைக் கட்டிவருகிறார். இவர் சமீபத்தில் தாய்லாந்து சென்று அங்கே களவாடப்பட்ட கிரெடிட் காட் மூலம் உல்லாசமாக இருந்தும் உள்ளார். இவருடன் மேலும் 2 இராணுவ உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர். இவர்களும் கந்தையா கொண்டுசென்ற கள்ள மட்டையை பாவித்தும் உள்ளனர். பிரித்தானியாவில் எதேட்சையாக யாராவது தமிழர்கள் கள்ள மட்டை போட்டு மாட்டிக்கொண்டால் உடனே அவர்கள் விடுதலைப் புலிகள் என இலங்கை அரசு பரப்புரைகளை மேற்கொள்ளும். இது நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.

ஆனால் இன்று இலங்கை இராணுவ அதிகாரிகளே வெளிநாடு சென்று கள்ள கிரெடிட் கார்டுகளைப் போட்டு வருவது அம்பலமாகியுள்ளது. படத்தில் காணப்படும் உயர் அதிகாரி இவர்களோடு சேர்ந்து மது அருந்துவதும் மற்றும் விடுதிகளுக்குச் செல்லும் காட்சிகள் தவிர மேலும் சில ஆதாரங்கள் சிக்கியுள்ளது. அவை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு இலங்கை அரசோடு படு நெருக்கமாகவும் இராணுவத்தின் உயரதிகாரிகளோடு பழக்கம் வைத்திருக்கும் கந்தையாவை யார் சுட்டது என்பது பெரும் கேள்விக்குறியாக அமைந்துள்ளது. லண்டன் புறநகர் பகுதியில் வசித்துவரும் கருணாவின் மனைவிக்கும் இந்த கந்தையாவே பணம் கொடுத்து உதவியதாகவும் ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் உட்பூசல் காரணமாக சுடப்பட்டு இருக்கலாம் என்ற வதந்திகளும் தாராளமாக உலாவருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறாயினும் சுட்ட நபர் இவரைக் கொலைசெய்யும் நோக்கில் சுடவில்லை என்பது மட்டும் தெரிகிறது. காரணம் குற்றவாளி T- 56 ரகத் துப்பாக்கியை பாவித்துள்ளார். இடதுபக்கத்தில் ஒரு சூடும் மற்றும் காலில் ஒரு சூடுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இவர் சிலவேளைகளில் முடமாக்கப்படலாம் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

















Geen opmerkingen:

Een reactie posten