20 January, 2012 by admin
பேராசிரியர் கோபன் மகாதேவன் என்றால் பலருக்குப் புரியாது இவர் யார் என்று. இவரின் அருமை பெருமைகள் சிலவற்றை நாம் சொன்னால் தான் தெரியும். இவர் 1974 ல் நடைபேற்ற தமிழாராட்சி மாநாடுகளில் கலந்துகொண்ட முக்கிய புள்ளி. ஆனால் தமிழ் ஆராட்ச்சி மாநாடு நடக்க இருந்த நிலையில் திடீரென அங்கிருந்து கொழும்புக்குச் சென்றுவிட்டார். ஆனால் மறு நாள் நடந்த நிகழ்வில் பொலிசார் சுட்டு 10 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது நடக்கும் என்று தெரிந்தே இவர் கொழும்புக்குச் சென்றுவிட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் இவர்மேல் இன்னமும் உள்ளது. பின்னர் லண்டன் வந்த இவர் ஆங்கிலப் புலமை பெற்று பேர்மிங்ஹம் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். இக் காலப்பகுதியில் தன்னை தமிழ் தேசியவாதியாக இவர் இனங்காட்டினார். பல தமிழ் தேசிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு தமிழருக்கு விடுதலை வேண்டும் எனக் கூறினார். ஆனால் தற்போது ...
கடந்த 22ம் திகதி டிசம்பர் மாதம் 2011 அன்று இவர் லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்குச் சென்று நிகழ்வுகளில் கலந்துகொண்டார். தனது ஆங்கில அறிவு மற்றும் புலமையை இவர் தமிழர்களுக்காகப் பயன்படுத்தவில்லை. மாறாக மகிந்தருக்கு புத்தாண்டு கவிதை ஒன்றை வரைந்து அதனை தூதுவருக்குக் கொடுத்து மகிந்தரிடம் கையளிக்குமாறு தெரிவித்துள்ளார். புலிகள் பலமாக இருந்த காலத்தில் அவர்கள் பக்கமும் பின்னர் இலங்கை அரசு பலமாக இருக்கும் காலகட்டத்தில் அவர்கள் பக்கமும் ஏன் தமிழர்கள் சாய்கின்றனர் ? பலமாக இருக்கும் பக்கம் சென்றால் தான் எல்லாம் நடக்கும் என தமிழர்கள் ஏன் நினைக்கிறார்கள் ? இது ஒரு பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
இவர் மகிந்தருக்கு எழுதிய காதல் கவிதையை இங்கே அழுத்திப் பார்க்கலாம்
Geen opmerkingen:
Een reactie posten