இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சிக்க வைக்க, தனது பிரச்சாரங்களுக்கு பயனப்படுத்தும் நோக்கில் சிறிலங்கா அரசு எடுத்து முயற்சி பலனளிக்கவில்லை.
இந்நிலையில் வட தமிழீழத்தில் எஸ்.எம்.கிருஸ்ணா பங்கெடுத்துக் கொண்ட நிகழ்சிகள் த.தே.கூட்டமைப்பினர் பங்கெடுக்காதது குறித்து சிறிலங்காவின் பொருளாதார அபிவிரித்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா பங்கெடுத்து ஆரம்பித்த வைத்த வட பகுதி வேலைத்திட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொள்ளாதது ஏன் என கேள்வியெழுப்பிய அமைச்சர் பசில் ராஜபக்ச இதுதான் இந்தியாவுக்கு அவர்கள் செய்யும் பிரதியுபகாரமா ? என கொட்டித் தீர்த்துள்ளார்.
இந்திய அமைச்சரின் நிகழ்வுகளை கூட்டமைப்பினர் புறக்கணித்திருப்பது அநீதியானது என தெரிவித்த பசில் இதைத் தமிழ் மக்கள் நன்கு உணர்வார்கள் என தெரிவித்தார்.
சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்தக் கோபத்துக்கு பின்னால்,
இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களை மையப்படுத்தி இடம்பெற்ற குறித்த நிகழ்வுகளில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை பங்கெடுத்துக் கொள்ள வைப்பதன் ஊடாக சிங்கள பௌத்த மேலாதிக்க நிலையை தமிழர் தாயகத்தில் நிலைநிறுத்திக் கொள்ள முனையும் அரசாங்கத்தின் திட்டம் பலனளிக்காமல் போயுள்ளது.
அண்மையில், இந்தியாவினால் உழவு இயந்திரங்கள் வழங்கப்படும் நிகழ்வொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை பங்கெடுக்கச் செய்த அரசாங்கம் அதனை தனது நலனுக்கு ஏற்றவாறு பிரச்சாரங்களை செய்ததோடு தமிழர்களுக்காக வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான உழவு இயந்திரங்களை சிங்களப் பகுதிகளுக்க வழங்கியிருந்தது.
இத்தகைய நிலைமை, தற்போது இந்தியாவினால் வழங்கப்படும் உதவிகளுக்கும் நடக்காது என்பதற்கு, எந்தவித உத்தரவாதமும் இல்லாத நிலையில் தாங்கள் பங்கெடுப்பதில் அர்த்தமில்லை என கூட்டமைப்பின் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார்.
போரின் பெரும் வலியைச் சுமந்து நிற்கின்ற தமிழ் மக்களுக்கு என இந்தியாவினாலும், சர்வதேசத்தினாலும் வழங்கப்பட்ட உதவிகள், பெரும் ஆரவாரத்துடன் தொடக்கப்படுவதும் அது போரின் வலியையே கண்டிராத சிங்கள மக்களுக்கு சென்றடைவதும் வழமையாகியுள்ள நிலையில், எமது மக்களை ஏமாற்றுகின்ற முன்னெடுப்புகளுக்குள் தாங்கள் சிக்கமுடியாது எனவும் கூட்டமைப்பு பிரதிநிதி தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten