[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 03:15.43 PM GMT ]
தமிழர்களின் தீர்வை பின்தள்ளவே கூட்டமைப்பிற்கு கிழக்கு மாகாணசபை முதல்வரின் மடல். தேசியத்தை மீண்டும் சிதைக்கவே இவ்வாறான ஏற்பாடு இடம்பெறுகின்றது. இதனை அனுமதிக்கக் கூடாது என கிழக்கு எல்லைகளற்ற மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிழக்கு மாகாண எல்லைகளற்ற மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சில ஊடகங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை கிழக்கின் முதல்வரை இரகசியமான முறையில் சந்திக்கக் கூடும் என உறுதிப்படுத்தப்படாத வகையில் தகவலகள் கூறியுள்ளன . அவ்வாறு ஒரு வரலாற்று தவறு இடம் பெறுமாக இருந்தால் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்கள் தழுவிய ரீதியில் சத்தியாகிரகத்தில அகிம்சை வழியில் வீதியில் இறங்குவதை யாரும் தடுக்க முடியாது.
கிழக்கு மாகாண மக்களின் ஆணையைப் பெற்றவன் என்று கூறுவதற்கு எந்த தகுதியும் அற்றவர் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேம் காரணம் தேர்தல் நடாத்தப்பட்ட சூழலை நீங்களே நன்கறிவீர்கள்.
மக்கள் வாக்குச் சாவடிக்கு வராமல் அதிக வாக்கை பெற்றவர் நீங்கள் இனியும் இவ்வாறு கிழக்கு மக்களின் ஆணையைப் பெற்றவன் என்பதை தவிற்பது நல்லது. 15 வருடம் அர்ப்பணிப்புடன் பேராடியவன் மக்கள் துயரை நேரில் பார்த்திருந்தால் இணைந்த தாயக மண்ணை பிரித்து சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற துணிந்திருக்க மாட்டிர்கள்.
ஒட்டு மொத்த தமிழர்களின் நிகழ் கால எதிர் காலம் பற்றி அக்கறை இருந்திருக்குமானால் துரேகம் இழைப்பதற்கு முன்னர் சிந்திருக்கலாம் அதை விட்டு விட்டு இன்று சிந்திப்பது ஜயப்பாட்டை ஏற்படுத்துகிறது.
பெறுமதியான தீர்வை பேசுவதற்கும் பெறுவதற்கும் தேர்தலில் கிழக்கில் நாம் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கியுள்ளேம்.
வட கிழக்கு இணைப்புத் தவிந்து மற்றய அனைத்து விடயங்கள் தெடர்பாகவும் பேசத் தயார் எனக் கூறும் இவரிடம் சுய நலம் உள்ளதுடன் எதிரியின் உத்தியின் வெளிப்பாடாகவே இவரின் மடல் தென்படுகிறது.
ஒட்டு மொத்த சர்வதேச நாடுகளும் தமிழர்களின் தீர்வு விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசியே தீர்வு பெற வேண்டும் என்பதில் உறுதியாய் உள்ள நிலையில் இவரின் சந்திப்பு எம் சமூகத்தின் தீர்வைப் பெறுவதில் இன்னும் இழுத்தடிப்பு செய்ய அரசு கையாண்ட தந்திரேபாய காய் நகர்த்தலே இச் சம்பவம் என்பதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
எமது அடிப்படை சித்தாந்தத்துடன் உள்ள ஒரு கட்சி கருத்தியல் ரீதியாக வேறுபட்டு இருந்து பேச்சுக்கு அழைத்தால் பேசுவதில் அர்த்தமுள்ளது ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் இணைந்த வடகிழக்கே என இருந்த பேது அதனை பிரதேச வாதக் கண்ணுடன் சிங்களத்திற்கு ஒத்தாசையாக இருந்ததை யாரும் மறந்து விடவில்லை.
நீண்ட போராட்ட அரசியல் அனுபவம் மிக்க தமிழ் தலைமைகள் இச்சந்திப்பின் எதிர் விளைவுகளை புரிந்து தவித்து செயற்படுவது எதிர்காலத்தில் எமது பலத்தை அதிகரிக்கும் என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம். என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லைகளற்ற மாணவர் ஒன்றியம்
கிழக்கு மாகாணம்
Geen opmerkingen:
Een reactie posten