தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 januari 2012

மக்களே இவர்கள்தான் உங்கள் போராளிகள்,மற்றவரை காட்டிக்கொடுப்பதாக சொல்லி அழித்தவர்கள்!!


athirvu.com
இமெல்டா -கருணாவுடன் சங்கீதனுக்கு என்ன தொடர்பு: அம்பலமாகும் ஆதாரங்கள் !
18 January, 2012 by admin


கனத்த மனதுடன் �அதிர்வு� கண்ணனுக்கு ஒரு மடல் (இல்லை கடிதம் என்று வைத்துக்கொள்ளலாமே) என்று ஒரு கடிதத்தை லண்டனில் இயங்கிவரும் தலைமைச் செயலகக் கோஷ்டியினரின் தலைவர் திரு.சங்கீதன் அவர்கள் எழுதியுள்ளார்... அதனூடாக அதிர்வு இணையம் மீது சேறுபூசும் நடவடிக்கையை அவர் மேற்கொண்டு உள்ளனர். 2009ம் மே மாதத்திற்க்குப் பின்னர் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி பிரித்தானியா வந்து பின்னர் 2011ம் ஆண்டு தாமே மாவீரர் தினத்தை நடத்துவோம் எனப் போட்டி மாவீரர் தின நிகழ்வுகளை நடத்தி லண்டனில் இரண்டாக மாவீரர் தின நிகழ்வுகளைப் பிழவுபடுத்தியவர்களும் இவர்களே. தற்போது இவர்கள் தமிழ் ஊடகங்களை கையகப்படுத்தவும் தமக்கு அடங்காத ஊடகங்கள் மீது சேறுபூசவும் ஆரம்பித்து இருக்கிறார்கள் ! மாவீரர் தின குழப்பங்களில் சூடு காய்ந்த இவர்கள் தற்போது வேறு வேலை இல்லை என்ற காரணத்தால் ஊடகங்களோடு சொறி தேய்த்து தேசிய ஊடகங்களுக்கு சேறு பூசி அதனையும் செயலிழக்கச் செய்யும் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல்பட ஆரம்பித்து உள்ளார்கள்.

அதாவது இவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டு என்னவென்றால் கருணா என்னும் தேசத் துரோகி கனடா சென்றாராம்.. அதனை நாம் எழுதவில்லையாம். அப்படி அவர் கனடா செல்லவில்லை என்ற செய்தியை அதிர்வு இணையம் எப்படி அறிந்ததாம் ! இது தான் இவர்கள் போடும் மில்லியன் டலார் கேள்வி ! கருணா ஒரு தனிப்பட்ட நபர் அவர் கனடா சென்றாரா இல்லையா என்பதனை கனேடிய தூதரகம் எவ்வாறு தெரிவிக்கும் என்கிறார் இந்த ஞானசூனிய சங்கீதன் ! கருணா ஒன்றும் தனிப்பட்ட நபர் அல்ல. அவர் ஒரு பிரதி அமைச்சர் இது ஒரு கசப்பான உண்மை. எனவே ஒரு ஊடகம் என்ற வகையில் நாம் ஒரு நாட்டு தூதுவராலயத்தை தொடர்புகொண்டு கேட்டால் அவர்கள் அதற்கு பதிலளித்து தான் ஆகவேண்டும். தட்டிக் கழிக்க முடியாது ! இவை எல்லாம் சங்கிதனுக்கு தெரியவில்லையா ? இல்லை தெரிந்தும் தெரியாதது போல நடிக்கிறாரா ? சரி இவ்வளவு அறிவு கூட இல்லாதவர்களை நம்பி இவர்கள் கேட்ப்பது போல இவர்கள் பின்னால் எப்படிச் செல்ல முடியும் ? இல்லை இவர்கள் தான் போராட்டங்களை நடத்தி எமது விடுதலைக்கு வழிசமைக்கப் போகிறார்களா ? என்ற சந்தேகங்கள் வலுப்பெறுகிறது அல்லவா ?

அடுத்த விடையம் நாம் இமெல்டாவைக் காட்டிக் கொடுக்க(அவர் ஆயுதம் கடத்திய விடையம்) வெளியிட்ட செய்தியால் விடுதலைப் புலிகளின் ஒரு பேராளியைய காட்டிக் கொடுத்துவிட்டோமாம். அதாவது நாம் பெயர் குறிப்பிட்ட அப் போராளி தற்போது எங்கே இருக்கிறார் என்பது எமக்குத் தெரியும். ஆனால் இவ்விடையம் சங்கீதனுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் இவ்வாறு ஒரு முட்டாள்தனமான கடிதத்தை இவர் எழுதியே இருக்கவேமாட்டார். நாம் வெளிப்படையாகவே ஒரு சவாலை விடுக்கிறோம் ! நாம் குறிப்பிட்ட அப் போராளி எங்கே இருக்கிறார் என்று தங்களால் கூறமுடியுமா ? இவர் எழுதிய கடிதத்தில் எல்லா இடங்களிலும் "அவர் கூறினார்" "இவர் கூறினார்" என்று மட்டுமே எழுதியிருக்கிறார் திரு சங்கீதன் அவர்கள் ! அதாவது இவர் கடிதத்தை எழுதி உள்ளார் ஆனால் அதில் எழுதியுள்ள கருத்துக்கள் எல்லாம் பிறரால் இவருக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதனை இவரே ஒப்பும் கொள்கிறார் !

அத்துடன் கருணா மற்றும் இமெல்டா பற்றி நாம் எழுதியது தமக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாம் எனவும் இவர் எழுதியுள்ளார். அப்படி என்றால் கருணா மற்றும் இமெல்டா ஆகிய இருவருக்கும் மற்றும் சங்கீதனுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது ? அதனையும் அவர் விபரிப்பது நல்லதல்லவா !

அதிர்வு இணையம் குறித்து பல விமர்சனங்களை முன்வைத்துள்ள திரு.சங்கீதன் அவர்களிடம் நாம் சில கேள்வியைக் கேட்க்க விரும்புகிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் தாம் தான் என்று மார்தட்டி நிற்கும் சங்கீதன் சமீபத்தில் எவ்வாறு இந்தியா சென்று திரும்பினார். அவரது மனைவி மற்றும் இரட்டைக் குழந்தைகள் எவ்வாறு இந்தியாவில் தங்கியிருக்கிறார்கள் ? முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் இருந்து சங்கீதன் எவ்வாறு தப்பி வந்தார். அங்கிருந்து எவரும் இந்தியா செல்லமுடியாத நிலையில் இலங்கை இராணுவத்திடம் இவர் சிக்கி பின்னர் எவ்வாறு தப்பி வந்தார் ? தாம் உறுதியான போராளி என்றால் ஏன் அவர் போராடவில்லை ? பல சாதாரண போராளிகள் இன்னும் இலங்கை இராணுவத்தின் சிறையில் இருக்கும்போது பெரும் பொறுப்பு வகித்ததாகச் சொல்லப்படும் சங்கீதன் மட்டும் எவ்வாறு தப்பி வந்தார் ? இவர் இலங்கை இராணுவத்தால் மூளைச் சலவை செய்யப்பட்டும் இருக்கலாம் அல்லவா ?

தாமே தலைமைச் செயலகம் எனக் கூறிவரும் சங்கீதன் எனப்படும் இன் நபருக்கு இப் பதவியை யார் வழங்கியது ? அதனை முதலில் உறுதிப்படுத்த முடியுமா ? புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில் இனி யாரும் சாட்சி கூற வரமாட்டார்கள் என்றதை இவர் சாதகமாகப் பயன்படுத்தி பல கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுவதை புலம்பெயர் தமிழ் மக்கள் நம்பிவிடுவார்களா என்ன ? லண்டனில் தலைமைச் செயலகம் என்று தம்மை அழைத்து வரும் இக் கோஷ்டியினர் வருடம் பிறந்தால் கலன்டர் விற்று காசு பொறுவதும் விளையாட்டுப் போட்டி நடத்தி அதில் கொத்துரொட்டி விற்று காசு பெறும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனரே தவிர வேறு எதை உருப்படியாகச் செய்து விட்டார்கள் ? எங்கே வருமானம் கிடைக்குமோ அந்தந்த நிகழ்வுகளை எல்லாம் தாம் தான் இனி நடத்துவோம் என இவர்கள் கூறிவருவது ஏன் ? ஒரு பரிசுப்போட்டி நடத்துவதோ இல்லை புலமைப் பரிசில் வழங்குவதோ இல்லையேல் கலாச்சார நிகழ்வுகளை நடத்த இவர்கள் ஏன் முன்வருவது இல்லை. பணம் சேர்க்கக்கூடிய நிகழ்வுகளை மட்டும் சங்கீதன் கோஷ்டி நடத்தக் காரணம் என்ன ?

இவ்வாறு பெறப்படும் காசு எங்கே செல்கிறது ? இல்லை மாவீரர் தினத்தில் 25,000 பேர் கலந்துகொண்டார்கள் என்கிறார்களே.. அதில் சேர்க்கப்பட்ட காசு எங்கே போனது என்று நாம் கேள்வி கேட்டால் எமது வாயை அடைப்பதற்கு சில தரம் கெட்ட ஊடகங்களை பாவித்து அதிர்வு மீது சேறு பூசியும் வருகின்றனர். ஒருவரை ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்றால் உடனே அவரைத் துரோகி என்று கூறும் கலாச்சாரம் இவர்களிடையே தற்போது வேறூன்றி இருக்கிறது. ஈழத்தில் ஆயுதப் போராட்டம் ஒன்று நடைபெறாத நிலையில் இவர்களால் சேர்க்கப்படும் பணம் எதற்காகச் செலவு செய்யப்படுகிறது ? ஊரில் உள்ள மாவீர் குடும்பங்களைக் கவனிப்பதாக இவர்கள் கூறிவருகிறார்களே இலங்கை அரசின் அனுசணை இல்லாமலா இது நடக்கிறது என்று நாமும் கேட்டால் இவர்களால் பதில் கூறமுடியுமா ? சமீபத்தில் வறுமை காரணமாக வன்னியில் ஒரு குடும்பம் நஞ்சு அருந்தி தற்கொலைசெய்ததே அதைப் பற்றி எவரும் பேசுவதோ இல்லைக் கடிதம் எழுதுவதோ இல்லை ! ஆனால் கருணா கனடா சென்றாரா இல்லையா , இமெல்டாவைப் பற்றி பேசவேண்டாம் என்று எல்லாம் கடிதம் எழுத மட்டும் இவர்களுக்கு நன்றாக நேரம் உள்ளது.

பின் குறிப்பு : தனது கடிதத்தில் ஈழத்தில் நின்று போராடிய தமக்கு புலம்பெயர் தமிழர்களை விட தேசிய உணர்வு அதிகம் எனக் குறிப்பிட்டுள்ளார் சங்கீதன். ஈழத்தில் வசிக்கும் மக்களுக்கா இல்லை புலம்பெயர் மக்களுக்கா தேசிய உணர்வு அதிகம் என நாம் பட்டி மன்றம் நடத்தவில்லை. இல்லை அதனை தராசில் போட்டு நெறுக்கவும் இல்லை. போராடி எமது விடுதலையை அடைந்தால் போதும் ! இறந்த பல்லாயிரக்கணக்கான மக்களையும் போராளிகளையும் நெஞ்சில் நிறுத்தி அவர்கள் எதற்காக மாண்டார்களோ அவர்களின் கனவு பலிக்கவும் எமது தேசிய தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் ஆசை பலிக்கவும் நாம் போராடினால் போதும். அதனையே அதிர்வு இணையம் தனது எழுத்து மூலம் செய்து வருகிறது. இனி வரும் காலங்களிலும் செய்யும்.

Geen opmerkingen:

Een reactie posten