தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 januari 2012

பிரபா, அன்ரன் உறவில் விரிசல் என்று அமெரிக்காவுக்கு சொன்ன சுரேஸ்! - ராஜிவ் காந்தியிடம் இலஞ்சம் வாங்கிய பிரபா!


[ Tuesday, 17 January 2012, 07:03.14 AM. ]

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அந்த இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டு இருந்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு தெரிவித்து இருக்கின்றார்.
2003 ஆம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் புலிகள் புறக்கணிக்க வேண்டும் என்பது பிரபாகரனின் விருப்பமாக இருக்க அம்மாநாட்டில் புலிகள் கலந்து கொள்ள வேண்டும் என்பது அன்ரனின் விருப்பமாக இருந்தது என்றும் இந்த அபிப்பிராய பேதத்தை தொடர்ந்து இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது என்றும் சுரேஸ் சொல்லி இருக்கின்றார்.

சமாதான முன்னெடுப்பு நடவடிக்கைகளில் கடும்போக்கை கைக்கொள்ள பிரபாகரன் தீர்மானித்து இருந்தார் என்றும் அன்ரனின் மென்மையான போக்கு பிரபாவுக்கு ஒத்து வரவில்லை என்றும் இதனால் தமிழ்ச்செல்வனுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி இருக்கின்றார் என்றும் சுரேஸ் மேலும் சொல்லி இருக்கின்றார்.

2003 ஆம் ஆண்டு மாநாட்டை பிரபாகரனின் உத்தரவின் பேரில் புலிகள் புறக்கணித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அன்ரன் பாலசிங்கத்தின் நடவடிக்கைகளை சமாதான முன்னெடுப்புக்களில் அந்நாட்களில் காண முடியாது இருந்தது என அமெரிக்கா கண்டு கொண்டது.

உடல் நிலை மோசமான நிலையில் அன்ரன் ஒதுங்கிக் கொண்டார் என்றும் செய்திகள் அந்நாட்களில் ஊடகங்களில் வெளியாகி இருந்தன.

அத்துடன் தமிழ்ச்செல்வனுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டு இருந்ததாக தெரிந்து உள்ளது.

இந்நிலையில் உடல் நிலை காரணமாக அன்ரன் ஒதுங்கிக் கொண்டாரா? அபிப்பிராய பேதம் காரணமாக பிரபாகரனால் ஒதுக்கப்பட்டு இருக்கின்றாரா? என்று அமெரிக்காவுக்கு சந்தேகம் எழுந்து இருந்தது.

சுரேஸ் பிறேமச்சந்திரன், என்.ரவிராஜ் ஆகியோர் பிரபாகரனால் அன்ரன் ஓரம் கட்டப்பட்டு இருக்கின்றார் என்று அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு சொல்லி இருக்கின்றனர்.
ராஜிவ் காந்தியிடம் இலஞ்சம் வாங்கிய பிரபா!
இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியிடம் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரன் பெரும் தொகை இலட்ச ரூபாவை இலஞ்சமாக பெற்று இருக்கின்றார்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு பிரபாகரனை இணங்க வைக்கின்றமைக்கு ராஜிவ் இற்கு வேறு வழி தெரிந்து இருக்கவில்லை.
மாதாந்தம் ஐந்து மில்லியன் இந்திய ரூபாய் வழங்கப்படும் என்று இணக்கம் காணப்பட்டு இருக்கின்றது.
ஜூலை மாத இறுதியில் ஒரு தொகைப் பணம் கையளிக்கப்பட்டும் இருக்கின்றது.
இந்திய தூதுவராக இருந்த டி.என். டிக்ஸிற், புலிகளின் சென்னைப் பேச்சாளர் ஆகியோரை மேற்கோள் காட்டி அந்நாட்களில் இத்தகவல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவந்து இருந்தது.
மேற்சொன்ன விடயங்கள் குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு இரகசிய அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டும் உள்ளது.
இந்திய – இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

தமிழ் - முஸ்லிம் மக்களின் இணைந்து தாயகப் பிரதேசமாக வடக்கு - கிழக்கு ஏற்று, தமிழை அரச மொழியாக ஏற்று மாகாண சபைகளூடாக அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்த இவ்வொப்பந்தம் ஏற்பாடு செய்தது.

Geen opmerkingen:

Een reactie posten