நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இன்றைய நாள் போன்று 1974 ஆம் ஆண்டு ஜனவரி 3ம் திகதி தொடக்கம் ஜனவரி 9ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
தமிழ் மக்களால் கோலாகலமாக நடாத்தப்பட்ட இந்த மாநாட்டில் அன்றைய சிங்கள ஆட்சியாளர்கள் திட்டமிட்டு கலகத்தை விளைவித்தனர்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான 1974 ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பதினொரு பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உட்பட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்திய குழப்ப நிலையினால் மரணம் அடைந்தமையானது சிங்கள பேரினவாதிகளின் அடாவடித்தனத்தை வெளிக்காட்டியது.
Geen opmerkingen:
Een reactie posten