17 January, 2012 by admin
உடனடியாக தாம் யார் யாருக்கு விசா வழங்கினோம் என மீள் பரிசீலித்த தூதரகம் அப்படி ஒரு ஒருவருக்கு விசா வழங்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்களாம். அவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிய பாதுகாப்பான தகவலில் தர்ஷி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று ஒருவர் விசா பெற்று அமெரிக்கா வந்துதான் உள்ளார் என்றும் அவருடைய புகைப்படத்தின்படி அவருடைய கூந்தல் ஸ்டைல் பொதுவாக இலங்கையரிடத்தில் காண முடியாத ஒன்று என்றும் ஒரு வேளை அவர் புலி உறுப்பினராக இருக்கலாம் என்கிற சந்தேகத்தை அவரின் தலை முடி தருகின்றது என்றும் இந்த இரகசிய தகவலில் எழுதப்பட்டு இருக்கின்றது.
ஆனால் அப்படியான எந்த ஒரு தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகள் திட்டமிடவில்லை. அத்தோடு அவர்கள் அப்படியான பெண் தற்கொலைப் போராளி ஒருவரையும் அனுப்பவும் இல்லை. குறிப்பிட்ட பெயரில் ஒருவர் அமெரிக்கா சென்றதை அறிந்த மோசஸ் என்பவர் அமெரிக்க தூதரகத்துக்கு இவ்வாறு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார் என்பது பின்னர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் இணையத் தளத்தால் இவ்விடயங்கள் அம்பலம் ஆகி உள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten