[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 04:06.16 AM GMT ]
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் நாடாளுமன்றில் குரல் கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அஞ்சியதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தகவலை அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
இரா.சம்பந்தனுக்கும், அமெரிக்கத் தூதுவர் Patricia A. Butenis ற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது, இந்தத் தகவல் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி இந்தத் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்ற விசாரணைகளை சர்வதேச சமூகம் குறிப்பாக புலம்பெயர் சமூகம் விரும்பி நிற்பதாக அதன்போது Butenis குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்துவதற்கு நாட்டம் காட்டாது என்று சம்பந்தன் கருதினார் என Butenis தெரிவித்துள்ளார்.
உண்மை நிலைமை அறிவிக்கப்பட வேண்டியது முக்கியம் என்ற போதிலும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் வெளிப்படுத்துவதனால் தமிழ் சமூகத்திற்கு பாதக விளைவுகள் ஏற்படக் கூடும் என சம்பந்தன் அஞ்சினார் என Butenis மேலும் குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten