தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 18 januari 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கைக்கு இராஜதந்திரிகள் கடும் எதிர்ப்பு: ஆங்கில நாளிதழ் (அறிக்கை இணைப்பு)


[ செவ்வாய்க்கிழமை, 17 சனவரி 2012, 01:44.25 AM GMT ]
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை, கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிலறிக்கையை ஊடகங்களுக்கு வெளியிடுவதற்கு முன்னர், அதன் பிரதிகளை வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு வழங்கி அவற்றின் அனுமதியைக் கோரியிருந்தது. இதுபோன்ற நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும் என்று இராஜதந்திர சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் எச்சரித்திருந்ததாகவும் ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது திட்டப்படியே, இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு முன்னதாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்து, போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், உண்மையான அதிகாரப்பகிர்வுக்கு அழுத்தம் கொடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்த கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திர சமூகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. என்று அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
வெளியிடப்பட்ட அறிக்கையின் முழுவடிவம் கீழேயுள்ள கோப்புகளை அழுத்திப்பார்க்கலாம்.

Geen opmerkingen:

Een reactie posten