தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 januari 2012

சொல்லொன்று செயலொன்று!- ஐ.நா செயலாளர் நாயகம் மீது பாயும் இன்னர் சிற்றி பிரஸ்



2009 மே மாதத்தில், சிறிலங்காவின் தடுப்பு முகாம்களுக்கு பயணம் செய்து, அங்கே இருந்த சிறார்கள், துப்பாக்கி முனையில் பாடிக்காட்டினர், இது வரையில் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் பற்றி, பான் கி மூன் போர்க்குற்ற விசாரணைகளுக்கான நடவடிக்கைகள் எதனையுமே எடுக்கவில்லை.
இக்குற்றங்களிற் சிறிலங்காவின் ஐ நா பிரதிநிதி அலுவலகத்தாலேயே மேற்கொள்ளப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பொன்றின் போது, ஐ.நா செயலாளர் நாயகம், சிறிலங்கா ஆட்சியைக் குறைகூறுவதை விடுத்து, தனது ஊழியர்களையே குறை சொன்னார்.
இவ்வாறு ஐ.நா செயலாளர் நாயகம் மீது தனது கடுமையான விமர்சனத்தை இன்னர் சிற்றி பிரஸ் முன்வைத்துள்ளது.
குற்றப் பொறுப்புக்கள் தொடர்பில் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் வெகுத்த வேறுபாட்டை ஐ.நா செயலாளர் நாயகம் கொண்டிருக்கிறார் எனவும் இன்னர் சிற்றி பிரஸ் விசனம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை  இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ள ஊடகர் மத்தியூ ரச்சல் லீயின் செய்திக்குறிப்பில்….
ஐ நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் குற்றப்பொறுப்புக்கள் தொடர்பில் சொல்லுக்கும், செயலுக்கும் இடையில் வெகுத்த வேறுபாட்டை காட்டுகின்றார்.
வியாழன் அன்று, சட்டத்தின் மேலாண்மை பற்றிப் பெரிதாகப் பேசிய திரு.பான் கி மூன், குற்றச் செயல்களுக்குப் பொறுப்பானவர்களைத் தண்டிப்பதில், தாம் சர்வதேச விசாரணைகளைப் பெரிதும் விரும்புவதாகவும், பொதுவாக மன்னிப்புக்களைத் தாம் எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
அப்போது, யேமன் சர்வாதிகாரி அலி சாலே விவகாரத்தில், சாலே கேட்டுப் பெறும் தறுவாயிலிருக்கும் அவருடைய மன்னிப்புப் பற்றி செயலாளர் நாயகம் அவருடன் பேசும்போது, ஏதாவது குறிப்பிட்டாரா என்று நான் வினவிய போது, தான் அவருடன் இது பற்றி எதுவும் பேசவில்லை என்றே கூறினார். உண்மையில், அவருடைய எதிர்ப்பு உண்மையானதாக இருந்தால், அந்த வேளையில் அதனை அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
2009 மே மாதத்தில், சிறிலங்காவின் தடுப்பு முகாம்களுக்கு பயணம் செய்து, அங்கே இருந்த சிறார்கள் துப்பாக்கி முனையில் அவருக்குப் பாடிக்காட்டிய போது, இதுபற்றிய சிந்தனை வரவில்லை.
இது வரையில் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் பற்றி, பான் கி மூன் போர்க்குற்ற விசாரணைகளுக்கான நடவடிக்கைகள் எதனையுமே எடுக்கவில்லை. இக்குற்றங்களிற் சிறிலங்காவின் ஐ நா பிரதிநிதி அலுவலகத்தாலேயே மேற்கொள்ளப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பொன்றின் போது, ஐ.நா செயலாளர் நாயகம், சிறிலங்கா ஆட்சியைக் குறைகூறுவதை விடுத்து, தனது ஊழியர்களையே குறை சொன்னார்.
ஐ நா பாதுகாப்புப் படைகள,; தாம் ஹைத்தியில் கொலெறாவைப் பரப்பியவை என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க மறுத்த அவர், அனைத்துக் கேள்விகளையும் தனது வழக்கறிஞர் பற்றீசியா ஒப்றாயனிடமே தள்ளிவிட்டார்.
ஐ நாவில் ஒளிவுமறைவற்ற நிர்வாகம் வேண்டுமென்று குறிப்பிட்டாலும் அது பற்றி அவர் நடவடிக்கை எடுக்கத் தவறியே விட்டார்.
யாராவது எழுதிக்கொடுத்த அறிக்கைகளை, தப்புத் தவறுகளைத் திருத்தாமல் ஓட்டை ஒடிசல்களுடன் முழுவதாக அப்படியே வாசித்துவிட்டுப், பின்னர் கேள்விகள் கிளம்பும்போது பதிலளிக்காமல் விலகி விடுவது அவர் பழக்கம்.
இவ்வாறு இன்னர் சிற்றி பிரஸ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten