தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 januari 2012

தமிழ் இன அழிப்பிற்கான நீதி கிடைப்பதற்கு சர்வதேச சுயாதீன விசாரணையே வழி வகுக்கும்: பிரித்தானிய பா.உ யோன் மேன்



[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 06:46.46 AM GMT ]
தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக் கெதிரான சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டுமென்ற முழுமையான விவாதமொன்றை பிரித்தானிய பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கான இணைய மனு (e-petition) ஒன்றினை பிரித்தானிய அரசின் இணையத் தளத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
 இதற்கு வலுச் சேர்க்கும் முகமாக நேற்று முன்தினம் பிரித்தானிய தமிழர் பேரவையினால் நடத்தப்பட்ட துண்டுப் பிரசுர விநியோகமும், அனைத்து இன மக்களிடமும் இவ் இணையத் தள மனுவில் கையெழுத்துப் பெறும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.
இதை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் யோன் மேன் , அலன் றொட்ஸ் (counsellor) ஆகியோர் நொட்டிங்கம் (Nottingham) தொகுதியில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் ஜோன் மேன் ஆல் அப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு இதன் அவசியம் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.
தமிழர்கள் மீதான தொடர்ச்சியான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் போன்றவற்றிற்கு எதிராக, சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றை மேற்கொண்டு (III Campagine) தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளுக்கான நீதியினைப் பெறுவதற்கான விழிப்புணர்வுப் பரப்புரைப் போராட்டமொன்றை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திலே (மே 18. 2011) பிரித்தானிய தமிழர் பேரவை ஆரம்பித்து வைத்தது. இதை பாராளுமன்ற உறுப்பினராகிய ஜோன் மேன் (John man) அவர்களே முதல் கையெழுத்திட்டு ஆரம்பித்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய அரச இணையத் தள மனுவில் அனைவரும் கையெழுத்திடுவதுடன் உறவினர்கள், நண்பர்கள், ஏனைய இனத்தவர்கள் அனைவரிடமும் இதன் அவசியத்தை தெளிவுபடுத்தி கையெழுத்திட வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அத்துடன் இவ் இணைய மனுவில் ஒரு இலட்சம் கையெழுத்துக்கள் பெற வேண்டி இருப்பதால் தொடர்ச்சியாக பிரித்தானிய தமிழர் பேரவையால் நடத்தப்படுகின்ற செயற்பாடுகளில் அனைத்து மக்களும் பங்கெடுப்பதுடன், அதற்கான ஆதரவினையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
பிரித்தானிய தமிழர் பேரவை.

Geen opmerkingen:

Een reactie posten