[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 07:23.06 PM GMT ]
இன்று மதியம் முதல் மாணவர்களை எச்சரிக்கும் சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் குடாநாடு எங்கும் பரவலாக காணப்பட்டது.
குறிப்பாக கஸ்தூரியார் வீதி, திருநெல்வேலி, கோப்பாய், கொக்குவில், போன்ற பல இடங்களில் காணக்கூடியதாக இருந்தது.
ஆனால் மாணவர்கள் துணிவுடன் அதனை அகற்றுவதையும் பார்க்க முடிந்தது . இந்து கல்லூரியில் காணப்பட்ட பிரசுரங்கள் மாணவர்களால் தீ இட்டு கொளுத்தப்பட்டது.
இதே போன்ற எச்சரிக்கையின் பின்னர், இதே அமைப்பினரால் எச்சரிக்கை விடப்பட்டு பின் 4 மாணவர்கள் கடத்தப்பட்டனர். மீண்டும் இது தலை தூக்கி இருப்பது பெற்றோர் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten