தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 januari 2012

தமிழர் தாயக வளங்கள் சிங்களவர்களால் பறிபோவது குறித்து ஜே.வி.பி மௌனம் காப்பது வேடிக்கை



[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 02:53.45 AM GMT ]
தமிழர்கள் தாயக  வளங்கள் இந்தியாவினால் கொள்ளையிடப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள சிறிலங்காவின் ஜே.வி.பி கட்சி,  சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் தமிழர் தாயகத்தின் வளங்கள் பறிபோவது குறித்து, மௌனமாக இருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது.
தமிழர்களின் பிரச்சனைகளை பகடைக்காயகப் பயன்படுத்தி, தமிழர்களின் வளங்களைச் கொள்ளையடிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
வடக்கு � கிழக்கு பகுதிகளில் அத்துமீறிப் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களால், தமிழர்களின் கடல்வளம் பறிபோவதோடு, தமிழர்களின் காணிகளையும் ஆக்கிரமிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்துக்கு தோள் கொடுத்த, ஜே.வி.பியானது, இன்று தமிழர்களின் நலன்களை முன்னிறுத்தி தன்னுடைய அரசியல் இருப்பை தக்கவைக்க முயற்சிப்பதோடு, சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் தமிழர் தாயகத்தின் வளங்கள் பறிபோவது குறித்து, மௌனமாக இருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது என தமிழ் புத்திஜீவிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten