தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 januari 2012

தடுப்புப் – புலனாய்வுத் துறையின் அடிப்படை நோக்கங்கள்! -மதுசன்



தனது நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் போது 1)பாதுகாப்புத் தவறுகளும் ஓட்டைகளும் குறைகளும் இருக்கும் இடங்களை அடையாளம் காணுதல். 2)இவற்றை நிவர்த்தி செய்ய உரிய இடத்திற்கு அறிவுறுத்தல் வழங்வுதல் மற்றும் 3)தடுப்பு நடவடிக்கை எடுத்தல். இவை அடிப்படை நோக்கங்கள் ஆகும்.
ஓற்றர்களையும் முகவர்களையும் 1)அடையாளம் கண்டு கைது செய்தல் 2)நாட்டிற்குள் பிரவேசிக்கும் அந்நியர்களைக் கண்காணித்தல் அந்நியர்கள் குற்றவாளிகளாக இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். இது தடுப்புப் பாதுகாப்பின் (preventive Security) முக்கிய அங்கம்.
பிற நாட்டு இராசதந்திரகளைப் பாதுகாத்தல். இராசதந்திரிகளுக்கு எப்போதும் என்ன வடிவத்தில் ஆபத்து வரும் என்று சொல்ல முடியாது. இராசதந்திரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது நாட்டின் கடமை. அதே சமயத்தில் விரும்பத்தகாத நடவடிக்கைகளில்  ஈடுபடும் இராசதந்திரிகளை பிடிப்பதற்கும், நாடு கடத்துவதற்கும் நடடிவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிரி நாட்டு புலனாய்வு அமைப்புக்கள் நாட்டிற்குள் புகுந்து தகவல் சேகரிப்பு மற்றும் நாசகார வலையமைப்பை உருவாக்குவதைத் தடுத்தல் உருவாக்கிவிட்டால் அதைத் தகர்க்க நடவடிக்கை எடுத்தல். இதற்கு சில உதாரணங்கள் இருக்கின்றன.
ஒரு நாடு இறக்குமதி செய்யாத அல்லது வழமையான முறையில் உள்ளுக்கு வராத பொருள் நாட்டில் காணப்பட்டால் அது பற்றி விசாரணை செய்ய வேண்டும். அனேகமாக எதிரி நாட்டினர் பயன் படுத்தும் தொலைத் தொடர்புக் கருவிகள், ஓலி, ஒளிக் கருவிகள் காணப்பட்டால் கட்டாயமாக அவற்றைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.
அவை எப்படி நாட்டிற்குள் வந்த சேர்ந்தன என்று பார்க்க வேண்;டும். இப்படியான புலனாய்வு ஆராய்ச்சிகள் நாட்டிற்குள் ஒற்றர்கள், தேச விரோதிகள், விரும்பத் தகாதவர்கள், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளளோர் ஆகியோரைப் பிடிப்படுவதற்கு உதவுகிறன்றன. இது அனுபவத்தில் கண்ட உண்மை.
எந்த நாட்டு அரசாக இருந்தாலும் பொதுவாக மூன்று பாதுகாப்புப் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றன. அந்த மூன்றும் பின்வருமாறு.
1 அரச பணியாளர்களின் உயிர் உடற் பாதுகாப்பு.
2அரசு நிர்மாணித்த கட்டமைப்புக்களின் பாதுகாப்பு. இதில் போக்குவரத்து மையங்கள் தொழிற்சாலைகள், வர்த்தக நிலையங்கள், மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்கள் என்பன அடங்கும்.
3 அரசு இயக்கும் சேவை, சேவை மையங்களின் பாதுகாப்பு. இதில் முக்கியமாக விமானங்களும் விமான நிலையங்களும் அடங்கும். ஆராய்ச்சி மையங்கள் ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் விண்வெளி நிறுவனங்களும் அடங்கும்.
ஊடுருவிகளின் முக்கியத்துவம்.
எவ்வளவு திறமையான பாதுகாப்பு ஒழுங்குகளைச் செய்தாலும் எதிரி நாட்டு ஒற்றர்களும் முகவர்களும் நாட்டிற்குள் ஊடுருவி விடுகிறார்கள். இதை தடுப்பது மிகவும் கடினம். ஏனென்றால் இது மனிதர்கள் சம்பந்தப்பட்ட விடயம். எதிர்ப்;புப் புலனாய்வு எதிர்கொள்ளும்  மிகப் பெரிய ஆபத்து ஊடுருவல் (Penetration) என்று அடையாளம் காணப்படுகிறது.
முள்ளை முள்ளால்; எடுப்பது போல் எதிரியின் ஊடுருவலைத் தடுப்பதற்கு தடுப்பு புலனாய்வு அமைப்புக்கள் அதே ஊடுருவல் முறைகளைப் பயன்படுத்துகின்றன. சற்று விளக்கமாகச் சொல்வதானால் ருஷ்ய உளவுத் துறை அமெரிக்காவுக்குள் ஊடுருவினால் அதைத் தடுப்பதற்கு அமெரிக்க உளவுத்துறை ருஷ்யாவுக்குள் ஊடுருவ வேண்டும்.
எதிரியின் நாட்டிற்குள் ஊடுருவினால் தான் எதிரியின் திட்டங்களை அறிய முடியும். அத்தோடு உங்களுடைய உளவுக் கட்டமைப்பிற்குள்ளும் உங்கள் நாட்டிற்குள்ளும் எதிரி ஊடுருவியதை அறிவதற்கும் எதிரியின் கட்டமைப்பிற்குள் கட்டாயமாக ஊடுருவத் தான் வேண்டும்.
இந்த வகையான ஊடுருவலுக்குப் பதிலடியான ஊடுருவல் நிழல் உலகு எனப்படும் புலனாய்வுத் துறையில் எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஓய்வு ஒழிச்சல் கிடையாது.
வெளிநாட்டுப் புலனாய்வுச் சேவைகளை எப்ஐஎஸ் (FIS) என்ற மூன்றெழுத்துக்களால் அடையாளமிடுகிறார்கள். (FIS) என்றால்  (Foreign Intelligence Services) என்று பொருள். இவர்களுடைய ஊடுருவலைத் தடுப்பது தான் தடுப்பு புலனாய்வின் முக்கிய பணி.
நாடுகளுக்குள் மாத்திரம் ஊடுருவல் நடத்தப்படுவதில்லை. விடுதலைப் போர் நடத்தும் அமைப்புக்கள், சர்வதேச மட்டத்தில் தீவிரவாதச் செயல்கள், போதைவஸ்து கடத்தல்கள் போன்றவற்றில் ஈடுபாடும் கும்பல்களின் அமைப்புக் களுக்குள்ளும் தடுப்புப் புலனாய்வுத் துறையினர் ஊடுருவுகின்றனர்.
சுருக்கமாகச் சொல்வதாயின் தடுப்பு புலனாய்வின் குறிக்கோள்கள் பிற நாட்டு ஊடுருவல்களைத் தடுத்தல், தீய சக்திகளின் அமைப்புக்களை ஊடுருவல் மூலம் அழித்தல் எதிரி நாட்டிற்குள் ஊடுருவுதல் என்பன வாகும்.
அமெரிக்க உளவுத் துறையின் வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றிய அலன் டல்லஸ்  (Allan Dulles)பின்வருமாறு கூறுகிறார். “தடுப்பு உளவுச் செயற்பாடுகள் மூலம் எதிரியை அடையாளம் காண்பது, அவனுடைய நடவடிக்கைகளைக் கண்கானிப்பது, அவன் நடவடிக்கை எடுக்க முன் தடுப்பது, அவனுடைய அமைப்பிற்குள் நுளைவது என்றவற்றிற்குள் அடங்கும்.” என்றார்.
பிறிதோர் இடத்தில் அலன் டல்லஸ் நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் நுட்ப இரகசியங்களை பாதுகாப்பதும் எதிரியிடம் அவை போகமால் தடுப்பதும் மேற்கூறிய பணிகளில் அடங்கும் என்றார்.
தடுப்பு புலனாய்வு ஆங்கில இலக்கியத்திலும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களிலும் முக்கிய இடம் பிடிக்கின்றன. ஜோன் லே கரே (John le Carre) என்ற புனைபெயரில் எட்டு நாவல்களை டேவிற் கோர்ன்வெல் (David Cornwell) என்பவர் படைத்தார்.
டேவிற் கோர்ன்வெல் ஐக்கிய இராச்சிய உளவமைப்புக்கள் எம்ஐ5, எம்ஐ6 ஆகியவற்றில் 1958 -1964 காலத்தில் பணியாற்றியவர். அவர் தொலைபேசி ஒட்டுக்கேட்டல், எதிரியின் தகவல்களைத் திருடுதல், ஒற்றர்களை எதிரி நாட்டிற்குள் அனுப்புதல் போன்றவற்றை பணிக் காலத்தில் செய்தார்.
அவர் எழுதிய நாவல்களில் அனுபவ முத்திரை பதிவாகியுள்ளது. அவர் உருவாக்கிய ஜோர்ஜ் ஸ்மைலி (George Smiley) என்ற கதாபாத்திரம் தடுப்புப் புலனாய்வின் பல்துறை அம்சங்களை விளக்குகிறது. பீபீசி தொலை காட்சியில் டேவிற் கோர்ன்வாலின் நாவல்கள் நாடகத் தொடராக வடிமைக்கப்பட்டுள்ளன.
“இரகசியம் கசியும் வாயிருந்தால். தேசியம் அழியும் பகைநெருப்பால்”
மதுசன் ஈழம் பிரஸ் – 29/01/2012 – பாகம் 18

Geen opmerkingen:

Een reactie posten