ஈழ மக்கள் ஜனநாயக கட்சி செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா திருமணம் ஆனவர். இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து கிடைக்கப் பெற்று உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. டக்ளஸ் தேவானந்தா குறித்த விபரக் கொத்து ஒன்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு ஜூலை 07 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இதில் அமைச்சர் தேவானந்தா திருமணம் ஆனவர் என்று உள்ளது.
அமெரிக்க தூதரக வட்டாரங்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தேவானந்தாவுக்கு இரு மகள்மார் உள்ளனர் என்றார்.
பிள்ளைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக யுத்த காலத்தில் கொழும்பில் அரச தொடர் மாடி வீடு ஒன்றில் தங்க வைத்து இருந்தார் என்றும் பிள்ளைகள் இருவரும் கொழும்பில் சர்வதேச பாடசாலையில் படித்தனர் என்றும் இத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
Geen opmerkingen:
Een reactie posten