அண்மையில் கிழக்கு மாகாண சபையில் காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்கின்ற தீர்மானத்தை கிழக்கு மாகாணசபையில் ஏகமனதாக நிறைவேற்றியிருக்கின்றனர். இதுவொரு காலம் கடந்த ஞானம் என்று நான் நினைக்கின்றேன். ஏனென்றால் கிழக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு ஏறக்குறைய மூன்று வருடங்கள் முடிந்து அடுத்த தேர்தலை எதிர்நோக்கியிருக்கின்ற வேளையில்தான் அவர்களுக்கு இந்த ஞானம் பிறந்திருக்கின்றது. என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.நேற்றைய தினம் பட்டிப்பளை மட்ஃவால்கட்டு தமிழ் கலவன் பாடசாலையின் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
தமிழ்தேசிய கூட்டமைப்பை பொருத்தமட்டில் நாங்கள் வடகிழக்கு மக்களுக்காக வடகிழக்கு இணைந்த ஒரு தாயகத்தில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய காணி அதிகாரம்.பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் உள்ளடக்கப்பட்ட சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு தீர்வையே நாங்கள் வலியுருத்திவருகிறோம்.
ஆனால் இப்போதுதான் கிழக்கு மாகாண சபையில் காணி அதிகாரம். பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்கின்ற தீர்மானத்தை கிழக்கு மாகாணசபையில் ஏகமனதாக நிறைவேற்றியிருக்கின்றனர். இதுவொரு காலம் கடந்த ஞானம் என்று நான் நினைக்கின்றேன். ஏனென்றால் கிழக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு ஏறக்குறைய மூன்று வருடங்கள் முடிந்து அடுத்த தேர்தலை எதிர்நோக்கியிருக்கின்ற வேளையில்தான் அவர்களுக்கு இந்த ஞானம் பிறந்திருக்கின்றது.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பை பொருத்தமட்டில் நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருவது காணி அதிகாரம்,பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களுடன் கூடிய தீர்வுதான் வேண்டுமென இப்போது பலர் அதனை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு சரியென்பதை புரிந்திருக்கின்றனர்.இதனை இப்போது கிழக்கு மாகாணசபையும் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அது குறித்து ஏகமனதான ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளனர்.
ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றுவரை சோரம் போகாமல் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வை பெறவேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததன் நிமித்தமாக இப்போது பலர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு சரியானதென்பதை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்த காணிக்காகவும் பொலீஸ் அதிகாரத்திற்காகவும் கடந்தகாலங்களில் ஆயுதம் ஏந்தி போராடிய சிலர் இப்போது காணி அதிகாரம்,பொலிஸ் அதிகாரம் தேவையில்லை எனக் கூறுகின்றார்கள் அவர்களுக்கு எந்த அதிகாரம் தேவை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என நினைக்கின்றேன் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten