தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் காட்டிலும் கருணா சிறந்த தளபதி என இந்திய அமைதிப் படையின் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் கேணல் ஹரிகரன் தெரிவித்திருக்கிறார்.
பிரபா - கருணா முறுகலைத் தொடர்ந்து அமெரிக்காவின் சென்னை துணைத் தூதரக அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள எழுத்துமூல ஆவணமொன்றில் இக்கருத்தைச் சொல்லியிருக்கிறார் ஹரிகரன்.
பிரபாகரனைக் காட்டிலும் சிறந்த தளபதி கருணா என்றும் எந்தவொரு மரபுவழிப் போரிலும் கருணா வெற்றிபெறக் கூடியவர்.
அத்துடன் பிரபாகரனால் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலையிலேயே கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தார்.
2004 ஆம் ஆண்டு மார்ச் 19-ம் திகதி சென்னை துணைத் தூதரகத்தில் இருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணமொன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten