அரச அதிபர் இமெல்டா சுகுமார் விடும் உல்டா ! ஆயுதங்களை தன் வாகனத்தில் கடத்தினார்
12 January, 2012 by admin
யாழில் இருக்கும் ஊடகவியலாளர்களைப் புலிகளுக்கு செய்தி கொடுப்பதாகக் கூறி கைதுசெய்யச் செய்யும் இமெல்டா ஒரு காலத்தில் தானும் ஆயுதம் கடத்தினார் என்பதனை ஒத்துக்கொள்ளுவாரா ? வளர்ந்து வரும் ஊடகவியலாளர்களை முன்னேற விடாது இவர் உதயன் பத்திரிகையுடன் சேர்ந்து ஆடும் நாடகத்தின் உச்சக்கட்டத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே நாம் இச் செய்தியினை வெளியிடுகிறோம். பொலிசாரைக் பயன்படுத்தி யாழில் ஊடகவியலாளர்கள் வாயை மூடவைக்கவும் அவர்கள் வெளிநாட்டிற்கு செய்திகளைக் கொடுக்கக்கூடாது என இவர் மிரட்டி வருகிறார்.
இலங்கை அரசு எதிர்பாராத ஒன்று... நாங்கள் தரும் தகவல்கள் சிலவேளைகளில் அரசாங்கத்தையே அதிரவைக்கும். அந்தளவுக்கு மறைக்கப்பட்டிருக்கின்றது யாழ்.அரச அதிபரின் நம்பிக்கைத் துரோகம். அக்காலப் பகுதியில் ஒரு அரச அதிபருக்கு சலுட் அடித்து, அவரின் வாகனத்தை பரிசோதனை செய்யாமல் மோப்ப நாயைக் கூட வைத்துச் சோதனை நடத்தாமல் வன்னிப் பெருநிலப்பரப்பில் இருந்து கொழும்புக்கு அனுப்பி வைத்தது அரசு. அந்த வாகனத்தில் பயணித்தது வேறுயாரும் அல்ல சாட் சாத் இமெல்டாவே தான். இவர் விடுதலைப் புலிகளுடனும் நல்ல மாதிரி இருந்தது இல்லை அத்தோடு அரசாங்கத்துக்கும் நல்ல மாதிரி இருந்தது இல்லை ! சரி வாருங்கள் மேட்டருக்குப் போகலாம் !
அவரின் செயற்பாடுகளில் ஒரு சிலவற்றைக் கீழே தருகின்றோம்:
விடுதலைப்புலிகளின் வவுனியா மாவட்டப் புலனாய்வுப் பொறுப்பாளரான பேரின்பம் (பொட்டம்மானின் நேரடி வழிநடத்தில் செயற்பட்ட ஒருவர்) என்வரின் கீழ் வழிநடத்தப்பட்ட இமெல்டா சுகுமார், தனது வாகனத்தில் ஐந்து தடவைகளுக்கு மேல் வன்னியிலிருந்து கொழும்புக்கு ஆயுதங்கள் கடத்தியவர் என்றால் நம்பமுடியுமா உங்களால் ? ஆம் அது நடைபெற்றதற்கான ஆதாரங்களும் இருக்கிறது. அத்துடன் சற்றலைட் (thuraya sat phone) தொலைபேசிகளைக் கொழும்பில் இருந்து வன்னிக்கு எடுத்து வந்து விடுதலைப்புலிகளுக்கு வழங்கியவர்களுள் முக்கியமான நபரும் இவரே. இவரால் இதனை மறுக்க முடியாது. ஆனால் தற்போது விடுதலைப் புலிகள் சிறுவர்களைப் படையணியில் சேர்த்தனர் கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டனர் என இவர் இலங்கை அரசுக்காக வக்காளத்து வாங்குவது எதற்காக ? இவர் முகமூடியை கிழிக்கவே நாம் இச் செய்தியை வெளியிடவேண்டி உள்ளது.
பேரின்பம் என்வரின் புலனாய்வு முகாம் டிப்போ றோட், கிளிநொச்சிப் பகுதியில் இயங்கி வந்தது. 2007 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இச் செயற்பாடுகளில் இலங்கை அரசு இதுவரை கண்டிராத ஆயுதங்கள் rdx jacket (exploder micro pistol ,laser sight.i c 2s walky) இமெல்டா சுகுமாரின் வாகனத்தில் கடத்தப்பட்டிருக்கின்றது. இதற்கு உடந்தையாக தற்போது கணவர் என்று சொல்லப்படுகின்ற அப்போதைய வாகனச் சாரதியே செயற்பட்டிருக்கின்றார். அத்துடன் வாகனங்களில் ஆயுதங்களைப் பொருத்துவதில் நுட்பமான விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தரான லிங்கராஜ் என்பவர் தான் இமெல்டாவின் வாகனத்தில் ஆயுதங்களைப் பொருத்தி விடுகின்றார் என்பதனை அவரால் மறுக்க முடியுமா ?. இல்லை இந் நிலையம் திருநகர் தெற்கு, கிளிநொச்சில் இயங்கி வந்தது என்பதனை இவர் மறந்திருப்பாரா ?
லிங்கராஜா ஆயுதங்களை வாகனத்தில் பொருத்தும் போது அதன் சாரதியையும் அருகில் வைத்திருப்பது வழமை. ஏனெனில் பொருத்தப்படும் ஆயுதங்களை கொழும்பில் உள்ள புலிகளுக்கு கழற்றிக் கொடுக்கும் பணியை சாரதியே மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக. இச் சாரதியைக் கணவராக்கி தனது இரகசியங்களைக் காப்பாற்றிக் கொண்ட பெருமை இவரையே சாரும். அத்துடன் இவருக்கும் புளொட் அமைப்பின் வவுனியா மாவட்டப் பொறுப்பாளரான மாணிக்கதாசன் என்பவருக்கும் இடையில் உள்ள தொடர்பினால் இவரின் குடும்பத்தில் குழப்ப நிலையும், அதனைத் தொடர்ந்து இமெல்டா தனது மகனின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார்.
இவரின் மகனான அற்புதராசா தர்சன் என்பவர் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவில் ரகு (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவருக்குக் கீழ், அவரின் வழிநடத்தலில் செயற்பட்டவர். இவருக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் வசந்தன் என்ற பெயர் வழங்கப்பட்டிருந்தது. இவருக்கான இரகசியக் குறியீடு ஜி.ரி.15 ஆகும். இவரை விடுதலைப்புலிகள் தொழில்நுட்பம் தொடர்பான கல்வியினைக் கற்றுக் கொள்ள வெளிநாட்டு ஒன்றுக்கு அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் திருவிளையாடல்கள் பல. அவரும் புலிகளுக்கு உண்மையுடையவராக நடந்துகொள்ளவில்லை.
முன்னாள் வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமரைச் கொல்வதற்குப் பயன்படுத்திய ஆயுதங்களைப் போன்ற ஆயுதங்களை இவர் தனது வாகனத்தில் ஏற்றி கொழும்பு கொண்டுசென்றுள்ளார். அன்று பலமாக இருந்த புலிகளுக்கு வால்பிடித்த இமெல்டா, தற்போது அரசுக்கு வால்பிடித்து, அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டு, ஊடகவியலாளர்களையும், ஊடக நிறுவனங்களையும் அடிமைப்படுத்தும் ஒரு திட்டமிட்ட நயவஞ்சகத்தனத்தை மேற்கொண்டு வருகின்றார். இவருக்குச் சல்லாரி அடிப்பதுபோல் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் உதயன் பத்திரிகை நிறுவனமும் செயற்பட்டு வருகின்றது. இது எல்லாவற்றுக்கும் மேலாக இமெல்டா சுகுமாரும், யாழ்ப்பாணத்தில் உள்ள சில ஊடகவியலாளர்களை அடக்கி, தாங்கள் செய்யும் அட்டூழியங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதைத் தடுக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாகத்தான் கடந்த சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் பல ஊடகவியலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். அத்துடன் பொய்யான தகவல்களைக் கொடுத்து ஊடகவியலாளர்களைக் காட்டிக் கொடுப்பதற்குப் பின்னணியாக இருந்த சுதந்திர ஊடக அமைப்பின் தலைவரின் தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவும் எம்மிடம் உண்டு. இதற்குப் பின்னணியாக இருந்த உதயன் பத்திரிகை, தங்களை விட வளர்ச்சியடைந்த சுயாதீன ஊடகவியலாளர்கள் மீது புலிகள் முத்திரை குத்தி அவர்களை நசுக்கும் ஒரு நயவஞ்சகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. தவறுகள் யார் செய்தாலும் அதனைத் தட்டிக் கேட்கும் உரிமையும், கடமையும் ஊடகத்திற்கு இருக்கின்றது. எனவே தாங்கள் செய்யும் தவறுகளை தாங்கள் வகிக்கும் பதவிகளைக் கொண்டு, அதிகாரங்களைக் கொண்டும் தடுத்து நிறுத்து முயல்வது முட்டாள்தனம் என்பதை அரச அதிபர் இமெல்டா சுகுமார் புரிந்து கொள்ள வேண்டும்.
இதன் காரணமாகவே நாம் இச் செய்தியை வெளியிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இமெல்டா சுகுமார் இரட்டை முகவராகச் செயற்பட்டுள்ளார் என்பது தற்போது நிரூபனமாகியுள்ளது. இதற்கு அரசாங்கத் தரப்பு என்ன செயப்போகிறது ? இக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்று இமெல்டா பதவி விலகுவாரா ?
அதிர்வுக்காக :
வல்லிபுரத்தான்.
Geen opmerkingen:
Een reactie posten