இறுதிப் போரில் கப்பல் ஒன்றை அனுப்பி காயப்பட்ட மக்களையும் விடுதலைப் புலிகளின் சில அரசியல் தலைவர்களையும் அங்கிருந்து எடுத்து விடுவதாக அமெரிக்கா உறுதியளித்ததாக நம்பிக்கை ஊட்டியவர்கள் யார் என்ற கேள்வி எம்மையெல்லாம் வாட்டி வதைக்கும் ஒன்றாகும். பேச்சுவார்த்தை நடைபெற்ற காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்த திரு.ருத்திரகுமாரன் அவர்கள் அமெரிக்காவோடு ஒத்துப் போகவேண்டும் என்றும் அமெரிக்க ராஜாங்கச் செயலகத்தை நாம் திருப்த்தியடைய வைக்கவேண்டும் எனத் தானே தன் கைப் பட எழுதிய கடிதம் அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இக் கடிதம் மறைந்த புலிகளின் முந் நாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இக் கடிதத்தை திரு ருத்திரகுமாரன் அவர்கள் தாமே கைப்பட எழுதி பேக்ஸ் மூலம் கிளிநொச்சிக்கு அனுப்பியுள்ளார். அதில் அவர் இடைக்காலத் தீர்வை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இடைக்காலத் தீர்வை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலை அப்போது காணப்பட்ட போதிலும் அதனைத் திணிக்கும் வகையில் இவர் கடிதம் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாது அமெரிக்க அரசு எதனை விரும்புகிறதோ அதனை திரு.ருத்திரகுமாரன் அவர்கள் நிறைவேற்றத் துடித்துள்ளார் என்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் நிலை என்ன ?

பிராந்திய நலன்களைக் கருதி அமெரிக்காவானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளின் விடையங்களில் அவ்வப்போது தலையிடுவது வழக்கம். உதாரணமாக இலங்கையானது சீனாவுடன் நட்புறவை வளர்த்தால் தடாலடியாக IMF எனப்படும் சர்வதேச வங்கி கொடுக்கும் இலங்கைக்கான கடனை அது நிறுத்தும். காரணம் அவ்வங்கி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது எனலாம். அவ்வப்போது இதுபோன்ற சில நடவடிக்கைகளை அமெரிக்கா எடுப்பது உண்டு. இதற்கு நல்ல உதாரணம் அமெரிக்கா வெளியிட்ட சட்டலைட் புகைப்படங்களாகும். முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு பாவித்த கனரக ஆயுதங்களைக் குறிவைத்தே இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது.

இதற்கு மேலாக தற்போது நாடு கடந்த அரசின் பிரதமரான திரு.ருத்திரகுமாரன் அவர்கள் அமெரிக்க நலன்சார் போக்கையே கொண்டுள்ளார் என்பது அவர் எழுதியுள்ள கடிதத்தில் இருந்து புலனாகிறது. "ராஜாங்க திணைக்களம் " மகிழ்ச்சி என்ற வார்ததைகள் ஊடாக இவர் என்ன நம்பிக்கையை ஊட்டி வந்தார் என்பது வெளியாகின்றது ? உண்மையில் அமேரிக்கா அப்படி கூறியதா ? இராஜாங்க திணைக்களம் அப்படிக் கூறியதா ?? இல்லை எல்லாம் உருத்திரகுமாரனின் கற்பனை வீர வசனங்களா ?? என்ற சந்தேகம் எழுகின்றது. காரணம் இறுதியில் அப்படி ஒன்றும் நடந்ததாகத் தெரியவில்லை. இவருக்கு அததகைய தொடர்புகள் இருந்திருந்தால் அது எங்கே ? இவரது அமெரிக்க உறவு என்பவர்கள் எமது இன்றைய நிலை பற்றி என்ன செய்கின்றார்கள் ?

இன்றும் கூட ரொபேட் ஓ பிளேக் போன்ற தலைவர்கள் ஈழ விடுதலை குறித்தோ இல்லை எமது போராட்டம் குறித்தோ நல்லபிப்பிரயம் எதனையும் கொண்டிருக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க அமெரிக்காவின் நலனுக்காக இவரும் இவர் சார்ந்தவர்களும் எதைச் செய்திருப்பார்கள ??? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.