தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 31 januari 2012

13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்போவதாக இந்தியாவுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை.


விடுதலைப்புலிகள் நாடாளுமன்றில் செயற்பட்டனர் அலறும் மகிந்த


நீண்ட காலமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த பலர் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களின் இறுதி இலக்கு பிரிவினைவாதமும், தனி இராச்சியம் அமைப்பதேயாகும். அதற்கு ஒரு போதுமே இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மகிந்த தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போர் முடிந்தபின்பும் தனிநாட்டு கொள்கையில் மற்றம் இல்லாமல் அதை நோக்கிய  அவர்களின்   போக்கு கண்டிக்கத்தக்கது.தனக்கு அதிகாரங்களை வழங்கும் உரிமையை மக்கள் அளித்திருக்கின்றனர்.ஆனாலும் இது ஒரு தேசிய பிரச்சனை பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்பட்டால்  நான் வடக்கு கிழக்கிக்கு செல்லமுடியாது.ஆனால் சம்பந்தன் எங்கு வேண்டுமானாலும் செல்லமுடியும் என்று  இவ்வாறு
நேற்று அலரிமாளிகையில் ஊடக ஆசிரியர்களைச் சந்தித்த போதே ஜனாதிபதி கூறியுள்ளார். இச்சந்திப்பின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் ஊடகங்கள் பற்றி ஜனாதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்போவதாக இந்தியாவுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை. கலந்துரையாடல் மட்டுமே நடத்தியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால், அந்தக் குழு எடுக்கும் தீர்மானத்திற்கு தாமும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயக்கம் காட்டுகிறது.
விடுதலைப் புலிகள் நிபந்தனைகளை முன்வைத்தே முன்பு அரசாங்கத் தரப்பினருடன் பேச்சுக்களில் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதே போக்கில் நிபந்தனைகளை முன் வைக்காமல் அரசாங்கத் தரப்பினரும் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும், பிரிவினைவாதக் கொள்கையை பின்னணியில் வைத்துக் கொண்டே காவல்துறை அதிகாரம், காணி அதிகாரம் ஆகிய அவசியம் என்று கேட்டு வருகின்றது. மேலும், கூட்டமைப்பு எதனையும் எதிர்க்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஒவ்வொரு சந்திப்பிலும் ஏதாவது ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்து, பேச்சுக்களில் இருந்து விலகிச் செல்கிறது.
அவர்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்துவம் வகித்து, தங்கள் யோசனைகளை முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்த ஏனைய உறுப்பினர்களின் ஆதரவை திரட்டுவதுதான் நல்லது. கூட்டமைப்பு எப்படியாவது நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தங்கள் பிரதிநிதிகளை முன்மொழிய வேண்டும். செனட் சபை உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் இறுதித் தீர்வை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடமே இருக்கின்றது. நாடாளுமன்ற தெரிவுக்குழு இணக்கம் தெரிவித்தால் செனட் சபை ஒன்றை ஏற்படுத்துவது சாத்தியமாகும்.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் அமைச்சரவை குழுவொன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ஆராய்ந்து வருகிறது.
மேலும், ஆணைக்குழு தெரிவித்த சில போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருக்கின்றனவா என்பதை அவதானிக்கும் பொறுப்பு இப்போது சட்டமா அதிபரிடம் உள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் அவற்றை நன்கு ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.
இது ஒரு தனிமனிதன் சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல. இந்நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சினைக்கு விடை காணும் விடயத்தில் பங்காளிகளாக இருக்க வேண்டும். அதனால் தான் அரசாங்கம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து, அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு நல்ல முடிவை எடுப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது.
இதேவேளை, 13ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு பற்றிய எனது நிலைப்பாட்டை இங்கு பகிரங்கப்படுத்தினால் அதை வைத்து ஊடகங்கள் எனக்கு எதிராக எழுதி நாட்டில் பிரச்சினையை உருவாக்க எத்தனிக்கும்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் நான் ஆதரித்து நடைமுறைப்படுத்துவேன். இது விடயத்தில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். மக்களின் அங்கீகாரத்துடனேயே இந்தத் தீர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் விரும்பாத ஒரு தீர்வை ஏற்படுத்தி, நாம் அதனை நடைமுறைப்படுத்துவது முடியாத காரியம்.
நிச்சயமாக மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை கொடுக்க முடியாது. அப்படி காவல்துறை அதிகாரத்தைக் கொடுத்தால் எனக்கு பெந்தர பாலத்தைக் கடந்து தென்னிலங்கைக்கு போக முடியாத சூழ்நிலை உருவாகும்.
காணி விடயத்தில் பல்லாண்டு காலமாக நடைமுறையில் உள்ள சட்டங்களே தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றது. அது பிரச்சினைக் குரிய விடயமல்ல.
அரசாங்கத்தின் தலைவன் என்ற முறையில் அரசாங்கத்தினால் நடை முறைப்படுத்தக் கூடிய யதார்த்தபூர்வமான விடயங்களையே நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியுமே ஒழிய நடைமுறைப்படுத்த முடியாத சிக்கலான காவல்துறை அதிகாரங்களை வழங்குவது பற்றிய யோசனைகளை ஏற்றுக் கொள்வது சாத்தியமல்ல.
இதேவேளை, ஊடகவியலாளர்கள் அநாவசியமான விடயங்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். உள்நாட்டு பிரச்சினையை அனைத்துலக மயப்படுத்தி தேசத்திற்கு அபகீர்த்தியையும், பிரச்சினைகளை உண்டு பண்ணுவதையும் ஊடகவியலாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம், 13 வது திருத்துக்கு அப்பாற்பட்ட திருத்தம் போன்ற விடயங்களில் ஊடகவியலாளர்கள் நடுநிலையில் இருந்து பக்கச்சார்பற்ற முறையில் சரி பிழைகளை புரிந்து கொண்டு தங்கள் ஊடகங்களில் கருத்துக்களை எழுதினால் இனப்பிரச்சினைக்கு நல்ல தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க முடியும்.
சில தமிழ் நாளிதழ்கள் இனவாதக் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றன. ஊடகங்கள் தங்கள் கடமையை நடு நிலையுடன் சிந்தித்து செயற்படுத்துவது அவசியம்.
சிலர் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக தவறான அரச எதிர்ப்பு பரப்புரைகளை வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் செய்வதானால் அது நாட்டிற்கே தீங்கு விளைவிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten