தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 12 januari 2012

இலங்கையின் போர்க்குற்றம்! வெளிநாடுகளின் தலையீடின்றி விசாரணைகள் நடத்த வேண்டும்!- ஸ்லோவேனிய நீதிபதி

[ வியாழக்கிழமை, 12 சனவரி 2012, 02:24.19 AM GMT ]
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை, வெளிநாடுகளின் தலையீடின்றி விசாரணைகளை நடத்தவேண்டும் இல்லையேல், சர்வதேச விசாரணைகள் காரணமாக இலங்கைக்கு சாதக நிலைகளை காட்டிலும் பாதகநிலைகள் அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக ஸ்லோவேனிய உயர்நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார். 
மற்றவர்கள் வந்து பிரச்சினைகளை ஏற்படுத்தும் முன்னர் இலங்கை அதற்கான பாதைகளை மூடுவது சிறந்தது என்று சுலொவேனியாவின் சட்டவாக்கல் நீதிமன்றத்தின் தலைவர் 
Ernest Petric தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரச்சினைக்கு கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாடுகளின் தலையீடுகள் இருந்தன. எனினும் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை.
எனவே வெளிநாடுகளின் தலையீட்டை தவிர்ப்பது அவசியமானது என்று. Ernest Petric கூறினார்.
உள்நாட்டிலேயே நல்லிணக்க ஆணைக்குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பரிந்துரைகளை வெளியிட்டமையை தாம் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது சிறந்த ஒரு முன்னெடுப்பாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த ஆணைக்குழுவின் மூலம் பழைய பிழைகளை களைந்து சரியான பாதை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று சுலோவேனிய நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் விடயத்தின் போது போர் குற்றங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
யாரும் தோற்கடிக்கப்பட்டாலோ அல்லது, பிழை செய்திருந்தாலோ, இந்தவிடயங்களில் நல்லிணக்கம் அவசியமானது. அதுவே ஒன்றிணைந்து வாழ்வதற்கான நிலையை ஏற்படுத்தும் 
என்றும் Ernest Petric  சுட்டிக்காட்டினார்.
லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்ற சொற்பொழிவு ஒன்றுக்காக வந்திருந்தபோது Ernest Petric  ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்தக்கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

Geen opmerkingen:

Een reactie posten