தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 januari 2012

கடைசி நேரத்தில் கந்தறுத்து காவடி ஆடும் தமிழ் அரசியல் தலைமைகளே! கவனம்!!

வலம்புரி அமெரிக்காவின் எடுபிடி என்பது இதன் மூலம் அறியக்கிடக்கிறது!! நாம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தோம்,இன்று அது எம்மை அடக்கி அடிமையாக்கிவிட்டது!!அதனை நாம் அமெரிக்கா நம் நாட்டுப் பிரச்சனையில் ஆதிக்கம் செலுத்துவது மூலமும் நாடு கடந்த அரசின் தலைமை அங்கே குடியுரிமை உள்ளதன் மூலமும் அறியுங்கள்!!
[ புதன்கிழமை, 11 சனவரி 2012, 06:16.02 AM GMT ]
இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசு இருப்பதை இப்போது உணரமுடிகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடுமையான அழுத்தம் இத்தகையதொரு நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது.
வன்னியில் கொடும்போர் நடத்தி தமிழ் மக்களை வதைத்ததன் விளைவாக உலக நாடுகள் எடுத்த முடிபுதான் இது. இதுவிடயத்தில் தயவு செய்து எந்தத் தமிழ் அரசியல் தரப்புகளும் உரிமை கோரக்கூடாது என்பது தாழ்மையான கோரிக்கை.
வன்னிப் போரில் எங்கள் உறவுகள் குண்டுபட்டுத் துடித்ததை, வெடிபட்டு விழுந்ததை, முட்கம்பி முகாம்களில் அடைபட்டு வதைபட்டதை, கைகட்டி கால்கட்டி உயிர் எடுத்ததை உலக நாடுகள் கண்டு கண்ணீர்விட்டு கொடிதுகொடிது என்று குளறிய செய்திகள் மறப்பதற்கில்லை.
நிலைமை இதுவாக இருக்கும் போது தமிழ் அரசியல் தலைமைகள் அரசை சர்வதேச வலைக்குள் வீழ்த்த சூழ்ச்சி செய்கிறது என யாரும் கூறிவிடக்கூடாது.
இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் வன்னிப் போரில் நடந்த அவலமான மனிதப் பேரழிவே இலங்கையைக் காட்டிக் கொடுத்தது.
எனவே, இலங்கை அரசு தான் செய்த கொடுஞ்செயலால் சர்வதேச சமூகத்திடம் மாட்டிக் கொண்டது. சனல் 4 தயாரித்த இலங்கையின் கொலைக்களம் என்னும் ஆவணப்படம் வன்னியில் ஈழத்தமிழ் மக்கள் பட்ட அவலத்தை உலகிற்கு எடுத்தியம்பியது.
சனல் 4 வெளியிட்ட கொலைக்களம் ஆவணப் படமே எங்கள் துயர அனுபவிப்புகளை, இலங்கையில் தமிழ் இனத்திற்கு எதிராக நடந்த கருவறுப்புக்களை காட்டிக் கொடுத்தன.
எனினும் எங்கள் அரசியல் தலைமைகள் இங்கொன்றும் வெளிநாடுகளில் வேறொன்றுமாக உரையாற்றி மக்களைக் குழப்பியதுண்டு. சிலர் அரசுக்கு மறைமுகமாக உதவும் வகையில் செயற்பட்டதும் தெரிந்ததே.
இத்தகைய செயல்களை நிறுத்தி இப்போது இருக்கக்கூடிய எமக்கான சாதக சூழ்நிலையைப் பயன்படுத்தி எங்கள் உரிமையை வென்றெடுக்க நாம் தயாராக வேண்டும்.
இலங்கை அரசு எங்களை வெருட்டலாம். நாமும் ஏதேனும் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயப்படலாம். இத்தகைய தளம்பல் நிலை தேவையற்றவை.
தமிழர்களின் பிரச்சினையை முடித்து வைப்பதென அமெரிக்கா முடிபெடுத்துவிட்டது. பின்னர் யார் வெகுண்டாலும் அதற்கு இடமில்லை.
எங்கள் உறவுகளின் உடல் அறுத்த குருதி பொங்கி எடுத்த பெருக்கால் கிருஸ்ணாவும் புறப்பட்டு வருகிறார். செய்த பாவம் பற்றிக் கொள்ளாமல் இருக்க, கடைசி நேரத்தில் கந்தறுத்து காவடி எடுக்கும் எங்கள் தமிழ் அரசியல் தலைமைகளே அதிகம் பிதற்றாமல் கடுமையாக தூங்காமல் விழிப்பாக இருங்கள்! விறுவிறுப்பாக இருங்கள்! ஆயத்தமாக இருங்கள். எல்லாம் நல்லதாய் நடக்கும்.
வலம்புரி ஆசிரியர் தலையங்கம்

Geen opmerkingen:

Een reactie posten