தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 januari 2012

சுயநிர்ணய உரிமைகளை பெற்றுக்கொள்ளுமாறு சம்பந்தனிடம் சிவில் சமூக உறுப்பினர்கள் கோரிக்கை


[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 02:53.26 AM GMT ]
13ஆம் திருத்தச் சட்டமூல யோசனையை புறந்தள்ளி சுயநிர்ணய உரிமைகளை பெற்றுக்  கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்  சம்பந்தனிடம் சிவில் சமூக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த ஒன்பது பிரதிநிதிகள் இந்தக்  கோரிக்கையை முன்வைத்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட குறித்த  தரப்பினர்,  இது தொடர்பில் மகஜர் ஒன்றையும் சம்பந்தனிடம் ஒப்படைத்துள்ளனர்.
எந்தவொரு காரணத்திற்காகவும் வடக்கு மாகாணசபையின் ஆட்சியை அரச தரப்பினருக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது என மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிலரும் இந்த மகஜரில் கையொப்பமிட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten