தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 januari 2012

புலியென மக்களிடம் பணம் சம்பாதிக்க பண்ணும் தந்திரமும் சாகசங்களும்!!



சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் தமிழ் மக்களின் தேசிய சின்னங்களடங்கிய முத்திரை!- தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ்
[ புதன்கிழமை, 04 சனவரி 2012, 04:16.24 PM GMT ]
சிறிலங்காவில் சர்ச்சைக்கு உள்ளான பிரான்சில் வெளியிடப்பட்ட தமிழ் தேசிய சின்னங்களால் அடங்கிய முத்திரையானது, பிரான்சு நாட்டின் சட்டத்திற்கு அமையவே வெளியிட்டபட்டுள்ளது என்பதை பிரான்ஸ் நாட்டின் தமிழீழ மக்கள் பேரவை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசால் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய விடயமாக எடுக்கப்பட்டு, சிறிலங்காவில் உள்ள பிரான்சு நாட்டின் தூதுவரை அழைத்து தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
 இன்று புலம் பெயர் மக்களாகிய நாம் எமது உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில் ,புலம் பெயர்த்து வாழும் தமிழ் மக்களின் உரிமைகளில் தலையிடும் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கப்போகிறோமா என்பது கேள்விக்குரிய விடயம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழீழ மக்கள் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புலம் பெயர் மக்களாகிய நாம் சிறிலங்கா அரசின் இவ்வாறான அழுத்தங்களுக்கு செவிசாய்க்காமல் நாம் வாழும் நாடுகளில் எழுதப்பட்ட சட்டங்களுக்கு அமைய நடக்கும் எமது செயற்பாடுகளை தடுக்க முடியாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழர்கள் தமது பாரம்பரிய தாய் நிலத்தில் வாழும் உரிமை உள்ளவர்கள், இந்த சாரதாரண மக்களின் அடிப்படை உரிமைகளை ஏற்றுகொள்ள முடியால் இன்றும் சிங்களவாத அரசியலை மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா, இன்று புலம் பெயர்மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கு தாம் வாழும் நாடுகளில் அளிக்கப்படும் உரிமைகளில் தலையிட்டு அவர்களது செயற்பாடுகளை தடுக்கும் முயற்சியிலேயே ஈடுபடுவதைக் காணலாம்.
இன்று பிரான்சில் புலம்பெயர் மக்களால் வெளியிடப்பட்ட முத்திரை ஆனது பிரான்சில் தபால் திணைக்களத்தின் ஊடாகவே வெளியிடப்பட்டது. இந்த முத்திரை அறுபது சதம் பெறுமதியும், இருபது கிராம் நிறையுள்ள கடிதங்களை பிரான்சிலும், ஐரோப்பாவில் சில நாடுகளுக்கும் நாம் அனுப்பும் கடிதங்களில் பாவிக்க முடியும். இதை பிரெஞ்சு நாடு சட்ட ரீதியில் தடைசெய்ய முடியாது என்பதை இங்கு நாம் எல்லோருக்கும் அறியத் தருகிறோம்.
அதே நேரம், சிறிலங்கா அரசானது இவ்வாறான விடயங்களில் தலையிடாது, மனிதவுரிமை சாசனத்தில் எழுதப்பட்டுள்ள படி, ஒரு இன மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பளித்து , இரு தேசிய இனங்களும் தமது பாரம்பரிய நிலங்களில் வாழும் உரிமைகளை வழங்கும் செயற்திட்டங்களில் உலக நாடுகளின் தூதுவராலயங்கள் உதவ வேண்டும் என கேட்டுள் கொள்கிறோம்.
தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ்.

பிரான்ஸ் தூதுவர் - அமைச்சர் பீரிஸ் சந்திப்பு! அஞ்சல் தலைவெளியீட்டுக்கு கண்டனம்
[ புதன்கிழமை, 04 சனவரி 2012, 01:45.03 AM GMT ]
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய படங்கள், இலச்சினைகளுடன் அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது குறித்து, கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டின் ரொபிசொனை, நேற்று சந்தித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை இயக்கத்தை ஆதரிக்கும் ஒரு அமைப்பு இந்த அஞ்சல் தலைகளை வெளியிடுவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் அனுமதித்திருப்பது உலக பயங்கரவாதம் தொடர்பாக பிரான்ஸ் கையாளும் பொறுப்பற்ற கொள்கையை எடுத்துக் காட்டுவதாக பிரான்ஸ் தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் விசனத்தை வெளியிட்டுள்ளதுடன், அஞ்சல் தலைகளை புழக்கத்தில் இருந்து உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுபோன்ற தீவிரவாத அமைப்புகள், நாடுகளிடையே இருந்து வரும் நட்புறவை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் வெளிநாடுகளில் உள்ள அரசாங்கங்களுடன் புலம்பெயர்ந்து சென்ற மக்கள் தொடர்புகளை வைத்து இலங்கை பற்றிய தவறான கருத்தை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு நாடுகள் இலங்கையின் நலனில் நம்பிக்கை வைத்து செயற்படுகின்றன என்ற உணர்வை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு, அந்தநாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது திட்டங்களை நிறைவேற்றும் முயற்சிகளில் தீவிரவாத குழுக்கள் மாற்று வழிகளில் ஈடுபட்டு வருவதாகவும், விடுதலைப் புலிகள் சார்பு அஞ்சல் தலைகளை உடனடியாக பிரான்ஸில் புழக்கத்தில் இருந்து விலக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பிரான்ஸில் உள்ள ஒரு நிறுவனம் அதற்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி இந்த அஞ்சல் தலைகளை வெளியிட்டிருப்பதாகவும், 360 அஞ்சல் தலைகளே வெளியிடப்பட்டதாகவும் இந்தச் சந்திப்பின்போது பிரான்ஸ் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, இந்த அஞ்சல் தலைகள் பிரான்ஸ் அரசினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்று கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.

விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட முத்திரை குறித்து பிரான்ஸ் தூதரகம் விளக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 03 சனவரி 2012, 01:40.32 PM GMT ]
பிரான்ஸில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவம் பதித்த எந்த முத்திரையும் உத்தியோகபூர்வ வெளியிடப்படவில்லை என்றும் அவ்வாறானதொரு முத்திரை பிரான்ஸ் தபாலகங்களில் விற்பனைக்கு வைக்கப்படவில்லை எனவும் இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம் இன்று அறிக்கை ஒன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரபாகரனிதும் மற்றும் புலிகள் இயக்கத்தின் சின்னங்கள் கொண்டதுமான முத்திரைகள் உத்தியோகபூர்வ பிரான்ஸில் வெளியிடப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.
பிரெஞ்சு தபால் சேவையான "லா போஸ்ட்" டில் சில நிபந்தனைகளின் அடிப்படையில் பிரத்தியேக முத்திரைகளை குறித்த அளவில் அச்சிட்டுக்கொள்ளும் அனுமதியை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.. இந்த வசதியை பயன்படுத்தியே தனி நபர்கள் சிலர் இவ்வாறான முத்திரைகளை அச்சிட்டுள்ளனர்.
இதேவேளை, முத்திரைகளுக்கான கட்டளை கொடுக்கப்பட்ட போது, அவை உரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதை அதிகாரிகள் கவனிக்க தவறியும் உள்ளனர் என்பதை லா போஸ்ட் உணர்ந்துள்ளது.என்றும் அது தெரிவித்துள்ளது.
அத்துடன் புலிகள் பயங்கரவாத இயக்கமாக ஐரோப்பிய ஒன்றியத்தினால். பட்டியல் படுத்தப்பட்டமை குறித்து பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ள நிலையில் இந்த முத்திரிகைகள் மேலும் அச்சிடப்படமாட்டாது எனவும் லா போஸ்ட் தெரிவித்திருந்தது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten