தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 januari 2012

கடாபியின் ஆதரவாளர்களை சித்ரவதை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்: கனடா [


 லிபியாவில் கடாபியின் ஆதரவாளர்களை புதிய தலைவர்கள் கொடுமைப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கனடா கேட்டுக் கொண்டுள்ளது.

பல பெரிய மனிதநேய சர்வதேச அமைப்புகள் லிபியாவின் சிறைகளில் கடாபி ஆதரவாளர்கள் படும் வேதனையை விளக்கி அறிக்கை அனுப்பியுள்ளன.
பல கைதிகள் சித்திரவதையால் உயிரிழந்தனர், விசாரணையின் போது அதிகக் கொடுமைக்கு உள்ளானவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை பெற்ற பின்பு மீண்டும் விசாரணை செய்து துன்புறுத்துகின்றனர்.
லிபியாவில் உள்ள சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பின் மூத்த ஆலோசகர் சித்திரவதைக்கு எதிராக தேவையான நடவடிக்கைகள் எடுத்த பிறகும் கூட இதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தமது அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் இவர்களில் இறந்துபோனவரின் குடும்பத்திற்கு எவ்வித நிவாரண உதவிகளும் வழங்கவில்லை. நீதிமன்ற விசாரணையும் நடத்தப்படவில்லை என்றார்.
சித்திரவதைக்குள்ளான கைதிகளின் தலை, கை, கால், முதுகு மற்றும் பிற பாகங்களில் வெளிக்காயங்கள் உள்ளன. இவர்கள் தலைநகரான திரிபோலியிலும் மற்ற சில நகரங்களிலும் சிறையில் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிறைக்கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாகுகின்றனர் என்று சர்வதேச அமைப்புகள் குரலெழுப்பியவுடன் பிரிட்டனின் பிரதமர் டேவிட் கமரூன் இந்தப் பிரச்னையை உடனடியாக லிபியா தலைவர்கள் சரிசெய்ய வேண்டும், சித்திரவதையை முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten