தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 januari 2012

முரளிதரனுக்கு கைலாகு கொடுக்க சங்கடப்பட்ட இராணுவத்தின் மனைவி



அமைச்சர் முரளிதரனுக்கு அலரிமாளிகையில் வரவேற்பு நிகழ்வு நடைபெற்ற போது ஒரு இராணுவச் சிப்பாயின் மனைவி கைலாகு கொடுக்க மிகவும் சங்கடப்பட்டுள்ளார்.
இது பற்றி மேலும் தெரிய வருவது என்னவெனில்,
தமிழீழ விடுதலைப் புலிகளால் 1996 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் திகதி முல்லைத்தீவில் படையினரின் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து இறந்த இராணுவச் சிப்பாயின் மனைவியான அனோமா அலரி மாளிகையில் கருணாவுக்கு கைலாகு கொடுக்க நேர்ந்தபோது மிகவும் சங்கடப்பட்டு இருக்கின்றார்.

முல்லைத்தீவு முகாமில் புலிகளிடம் சிக்கிய இராணுவத்தினரை மீட்கின்ற பணிகளில் முன் நின்று ஈடுபட்ட தளபதிகளில் ஒருவர் லெப்டினண்ட் கேணல் ஏ. எஃப். லாபீர்.

1500 படையினரை காப்பாற்றுகின்ற மீட்பு நடவடிக்கையில் சூடுபட்டு மறுநாள் உயிரிழந்தார்.

லாபீரின் மனைவி அனோமா லாபீர். விதவையான அனோமா 2005 ஆம் ஆண்டு முதல் அலரி மாளிகையில் முக்கிய பொறுப்பு ஒன்றில் இருந்து வருகின்றார்.

புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து அரசில் இணைந்து அமைச்சுப் பதவியிலுள்ள முரளிதரனுக்கு அலரி மாளிகையில் வரவேற்பு வழங்கப்பட்டது.

கருணாவுக்கு கைலாகு கொடுத்து வரவேற்க வேண்டும் என்று அனோமாவுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

வரவேற்பு விழாவில் எவ்வித சலனங்களும் ஏற்படக்கூடாது என அனோமா உறுதியாக இருந்தபோதிலும்,  முரளிதரனுக்கு கைலாகு கொடுக்கும் அந்நேரத்தில் மிகவும் சங்கடப்பட்டு போனார்.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி வழங்கியபோது புலிகள் இயக்கத்தில் வே. பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்  கருணா என்ற இம் முரளிதரன் தான், முல்லைத்தீவு தாக்குதலை முன்னின்று நடத்தியவர், எனவே எனது கணவனின் மரணத்துக்கு காரணமானவர் இவரது முன்னாள் இயக்க அமைப்பு தான். இவர்களால் என் கணவனை இழந்து இந்நிலையில் இருக்கும் நான் எவ்வாறு கைலாகு கொடுக்க முடியும் என்று சொல்லி இருக்கின்றார்.

Geen opmerkingen:

Een reactie posten