தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா எந்தவொரு நாட்டிலும் அரசியல் தஞ்சம் பெற முடியாதவராக உள்ளார் என்று அமெரிக்கா கண்டு கொண்டு உள்ளது.
கருணாவும், அவரது ஒன்பது லெப்டினண்ட்மாரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மட்டக்களப்பு அலுவலகத்துக்கு 2004 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சென்று அரசியல் தஞ்சம் பெறுகின்றமை தொடர்பாக பேசி இருக்கின்றனர். சமாதானத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்ற குற்றங்களை புரிந்து இருக்கின்றமையால் ஜெனிவா உடன்படிக்கையின்படி அரசியல் தஞ்சம் தர முடியாது என வந்தவர்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி Neil Wright 2004 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரியுடன் உரையாடி இருக்கின்றார். அப்போதே இத்தகவலை கூறி இருக்கின்றார். கருணாவும், அவரது லெப்டினண்ட்மாரும் பல நாடுகளிடமும் அரசியல் தஞ்சம் கேட்டு இருக்கின்றனர் என்றும் ஆனால் இவர்களின் அரசியல் தஞ்சக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் மேலும் குறிப்பிட்டு இருக்கின்றார். இந்நிலையில் இலங்கையில் தங்கி இருக்கின்றமையை தவிர கருணாவுக்கு வேறு தெரிவு கிடையாது என அமெரிக்கா விளங்கி வைத்து உள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் கிடைக்கப் பெற்று உள்ளன. |
Geen opmerkingen:
Een reactie posten