19 January, 2012 by admin
மூதூர் மல்லிகைத்தீவைச் சேர்த்த கந்தையா இராஜகோபால் என்பவர் அண்மையில் திருகோணமலையில் வைத்து இனம் தெரியாத நபர்களால் சுடப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார். இந்நிலையில் இக்கொலை முயற்சியை திசைதிருப்பும் வகையில் சில சதி முயற்சிகள் நடைபெறுவதாக அறியக்கூடியதாக உள்ளது. கள்ளமட்டை ,இராணுவத்துடன் சம்மந்தன், புலிகளுடன் சம்மந்தம், துணை இராணுவக் குளுக்களுடன் சம்மந்தம்,போன்ற பொய்யான செய்திகளை வழங்கி அவர்களின் தனிப்பட்ட வாழ்கையில் களங்கத்தை ஏற்படுத்துகின்றார்கள்.
பொதுவாக இவர்களின் குடும்பத்தினர் இரானுவத்தினருடனோ அல்லது துணை இராணுவக்குளுக்களுடனோ அல்லது விடுதலை இயக்கங்களுடனோ பெரிதான உறவுகள் இல்லை. இவர்கள் தமது வியாபாரத்தில் கவனம் செலுத்தியவர்கள் தனிப்பட்ட ரீதியில் இராஜகோபால் என்பவர் சமுக சேவையாளர். இவர் மலையகத்தில் உள்ள அனாதைகள் இல்லைத்தை பராமரிப்பது விதவைகளுக்கான உதவிகள் பாடசாலைகளுக்கான உபகரணங்களை வழங்குவதும் தமிழ் கோவில்களைக் கட்டுவதற்கான உதவிகளை வழங்கிவருகின்றார். இப்படி பட்டவர்களை விமர்சிப்பது எமது சமுகத்திக்கு நல்லது இல்லை.
Geen opmerkingen:
Een reactie posten