தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 januari 2012

50,000 கள்ள வோட்டுகள் குத்திய டக்ளஸ் பெரிசா இல்லை கருணா பெரிசா:விக்கி லீக்ஸ்

24 January, 2012 by admin
விக்கி லீக்ஸ் இலங்கை குறித்து பல தகவல்களை வெளியிட்டு வருவது யாவரும் அறிந்த விடையமே. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவில் உள்ள தலைமையகத்துக்கு பாதுகாப்பான கேபிள் மூலம் அனுப்புவது வழக்கம். இத் தகவல்கள் பலதை ஊடறுத்து அவற்றை தன்வசமாக்கியிருக்கும் விக்கி லீக்ஸ் தற்போது மேலதிகமாக பல செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்த கருணா இலங்கை அரசுடன் சேர்வதற்கு முன்னரே இலங்கை அரசோடு இணைந்து வேலைசெய்யும் ஒரு நபர் என்றும் அவர் ஒரு கிரிமினல் என்றும் அமெரிக்க தூதரகம் கருதியுள்ளது. துணை ஆயுதப்படையை வைத்திருக்கும் டக்ளஸை வைத்து கோத்தபாய பல காரியங்களை செய்துள்ளார் என்றும் தேர்தல் சமயங்களில் இக் குழு கள்ளவோட்டுக்களை குத்தியதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்து இலங்கை அரசுடன் சேர்ந்தபோது அவர் மகிந்தரின் செல்லப்பிள்ளையாக மாறியதாகவும் இதனால் கருணா மற்றும் டக்ளஸுக்கு இடையே யார் அரசுடன் கூட ஒட்டிக்கொள்வது என்பது போன்ற பிரச்சனைகள் தோன்றியதாகவும் அறியப்படுகிறது. இலங்கையில் உள்ள தமிழர்களைச் சமாளிக்க டக்ளஸையும் வெளிநாட்டில் உள்ள தமிழர்களை சமாளிக்க கருணாவையும் பயன்படுத்த இலங்கை அரசு திட்டம் தீட்டி இருந்ததாம். இருப்பினும் கருணாவின் செயல்பாடுகளை கோத்தபாய விரும்ப ஆரம்பித்ததாகவும் அவர் பின்னர் டக்ளஸை கைவிட்டதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. கப்பம் பெறுதல் ஆட்கடத்தல் போன்ற நடவடிக்கைக்கு கருணா குழு பயன்படுத்தப்பட்டதாக தாம் சந்தேகிப்பதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான ஹீத் ஷோல்லர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவர் டக்ளஸை சந்திக்கவேண்டும் என இலங்கையால் கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாம். டக்ளஸை சந்திக்கவேண்டாம் என அமெரிக்க தூதரகம் ஹீத் ஷோல்லருக்கு அறிவுரை கூறியுள்ளது. இருப்பினும் இலங்கையின் கடும் அழுத்தம் காரணமாக புகைப்படம் எடுக்காமல் தனிப்பட்ட ரீதியில் சந்திப்பதாயின் தாம் தயார் என ஹீத் ஷோல்லர் கூறியுள்ளார். 1998 ல் நடந்த உள்ளூராட்ச்சித் தேர்தல்களில் கள்ளவோட்டு பலவற்றைப் போட்டு ஈ.பி.டி.பி யினர் வென்றதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது 1999ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்காவுக்கு ஆதரவாக சுமார் 50,000 வோட்டுகளை திரட்டியுள்ளனர் ஈ.பி.டி.பி குழுவினர். அவை அனைத்துமே கள்ளவோட்டுகளாக இருக்கலாம் என்கிறது அமெரிக்க தூதரகச் செய்திகள்.

ஏன் எனில் தமிழர்கள் வாழும் பிற மாவட்டங்களில் தமிழர்கள் சந்திரிக்காவை எதிர்த்துப் போட்டியிட்ட நபருக்கே தமது வாக்குகளை அளித்திருந்தனர். அப்படி இருக்கும்போது யாழ்ப்பாணத்தில் மட்டும் எப்படி இவ்வளவு வோட்டு விழுந்திருக்கும் என அமெரிக்க தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது. இவ்வாறு இலங்கை அரசுக்கு பல வருடமக வாலாட்டிய டக்ளஸின் நிலை தற்போது கவலைக்கிடம் என்றும் காட்டிக்கொடுத்த கருணாவைத் தான் இலங்கை அரசு தலைமேல் வைத்து கொண்டாடுவதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது. கருணாவின் குழு கடத்தலில் ஈடுபடுவதையும் கப்பம் பெறும் நடவடிக்கையில் ஈடுபடுவதையும் அமெரிக்க அரசு தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருக்கும் மோர் என்பவரால் இத் தகவல்கள் அமெரிக்க தலைமைக்கு அனுப்பட்டுள்ளது. (விக்கி லீக்ஸிடம் இருந்து அதிர்வு பெற்றுக்கொண்ட தகவல்: Ref ID: 09COLOMBO624)



Send To Friend | செய்தியை வாசித்தோர்:40671

Share

Geen opmerkingen:

Een reactie posten