சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலையை தடுக்க, ஐ.நா பாதுகாப்புச் சபையின் பிராந்திய ரீதியிலான செயலின்மையே காரணமென, ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னால் ஆணையாளரும், International Crisis Group அமைப்பின் தலைவருமாகிய Louise Arbour அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் இருந்து வெளிவரும் La Croix நாளேடு Louise Arbour அம்மையார் அவர்களை செவ்வி கண்டிருந்தது.
அரபுலகில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி, அதன் பின்னாளான அனைத்துலகத்தின் செயற்பாடுகள் குறித்தான இச்செவ்வியிலேயே மேற்குறிப்பிட்ட கூற்றினை அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஒருமித்த கருத்தினைக் கொண்டிராத ஐ.நா பாதுகாப்புச் சபையில், லிபியாவில் ஏற்படவிருந்த பேரழிவில் இருந்து மக்களைக் காக்கும் நோக்கில், 2011ம் ஆண்டு மார்ச்சில், ’1973த் தீர்மானம்’ சபையில் பிரயோகிக்கப்பட்டு, அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இது ஆச்சரியமான ஒன்று.
பிராந்திய ரீதியான செயல்முறையை கொண்டிராத பாதுகாப்புச் சபையின் நிலை, இலங்கை விடயத்தில் நிருபணமாகியது. இது 2009 ஆண்டில் பேரழிவுக்கு வழிவகுத்தது.
உண்மையான நல்ல நோக்கங்களை கொண்ட முன்மொழிவுகள், சபையில் ஏமாற்றங் கொள்ள வைக்கின்றது.
இவ்வாறு Louise Arbourஅம்மையார் அவர்கள் லிபியா, சிரியா போன்ற நாடுகளில் மக்களை பாதுகாப்பதில் அக்கறை கொண்டுள்ள பாதுகாப்புச் சபை நாடுகள், இலங்கை விடயத்தில் தங்களின் ஒருமித்த நிலையை எடுக்கத் தவறிவிட்டதென்ற நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten