தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 januari 2012

கெஹலிய ரம்புக்வெல்ல மகளுடன் தவறாக நடக்க முயன்ற சவேந்திர சில்வா! விடயத்தை பெரிதாக்க வேண்டாம் என ரம்புக்வெல்லவிடம் மஹிந்த தெரிவிப்பு




[ வியாழக்கிழமை, 12 சனவரி 2012, 09:42.33 AM GMT ]
நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கை நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் செயலகத்தில் பணியாற்றும், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் சந்துலவிடம், ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தவறாக நடந்து கொள்ள முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நியூயோர்க்கில் உள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதியின் செயலகத்தில் உள்ள அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டி இந்தத் தகவலை லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
செயலகத்தில் தன்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், போராடி அவரது பிடியில் இருந்து தப்பிக் கொண்டதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்லவின் மகள் தூதரக உயரதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளதுடன், இந்த விவகாரத்தை இதற்கு மேலும் பெரிதுபடுத்தாமல் அமைதியாக இருக்குமாறும் அறிவுரை கூறியுள்ளார்.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீதான இந்தக் குற்றச்சாட்டு, பகிரங்கமானால் அதனை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தமது நலனுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் என்றும் லங்கா நியூஸ் வெப் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இலங்கை அமைச்சர் கெகலிய ரம்புகவெல்லவின் மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர துணைப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து ரம்புகவெல்லவிடம் மன்னிப்பு கோருமாறு, சவேந்திர சில்வாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநியின் அலுவலகம் நியூயோர்க்கில் உள்ளது. இங்கு ரம்புகவெல்லவின் மகள் சந்துல பணியாற்றி வருகிறார். இங்குள்ள துணைப் பிரதிதியான சவேந்திர சில்வா, சந்துலவிடம் தவறாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது.
சில்வா தனது அலுவலக அறைக்குள் தன்னை இழுத்துச் சென்று தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், அவரிடம் சண்டையிட்டு ஒருவழியாக வெளியே தப்பி வந்ததாகவும், சந்துல புகார் கூறியுள்ளார்.
இது குறித்து ராஜபக்சவிடம் ரம்புகவெல்ல புகார் கூறியதையடுத்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில், சில்வா தவறாக நடந்து கொண்டது உறுதியானதையடுத்து, ரம்புகவெல்லவிடம் மன்னிப்பு கோருமாறு அவருக்கு ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அதே நேரத்தில் சந்துலவின் நடவடிக்கைகள் சரியில்லை என்றும் ரம்புகவெல்லவிடம் ராஜபக்ச கூறியதாகத் தெரிகிறது.
இதேவேளை ரம்புகவெல்ல மீதும் ஏற்கனவே பல புகார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் ஒன்று, அவருக்கும் ஒரு டிவி நடிகைக்கும் உள்ள தொடர்பாகும். மேலும் ரம்புகவெல்லவின் மகன் லண்டனில் ஒரு ரஷ்ய விபச்சாரப் பெண்ணுடன் பிடிபட்ட விவகாரமும் சில காலத்துக்கு முன் வெளியே தெரியவந்ததும் குறிப்பிடத்தக்கது.
மன்னிப்பு கேட்டதோடு சில்வாவை ராஜபக்ச விட்டுவிடக் கூடும் என்று தெரிகிறது.
இலங்கையின் பெயர் கெட்டுவிடும் என்று கூறி, இந்த விவகாரத்தை இதற்கு மேல் பெரிதாக்க வேண்டாம் என்று ரம்புகவெல்லவிடம் ராஜபக்ச கூறியுள்ளதாகவும் தெரிகிறது.
இலங்கையில் புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரின்போது நடந்த இனப் படுகொலைகளில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் பெரும் தொடர்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அவரைக் காக்க ராஜபக்ச தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

Geen opmerkingen:

Een reactie posten