தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 februari 2012

தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதை பாராளுமன்றம்தான் முடிவு செய்யும்:ராஜபக்சே திடீர் பல்டி


rajapaksha

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடைபெற்று வந்த சண்டை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இதையடுத்து முள்வேலி முகாம்களில் தங்கி இருந்த லட்சக்கணக்கான தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தும் பணி தொடங்கியது. இதுவரை கிட்டத்தட்ட 90 சதவிகிதம் தமிழர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டு விட்டனர். மீதமுள்ளவர்களும் விரைவிலேயே சொந்த இடங்களுக்கு சென்று விடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் இனப்போர் உருவாகியதற்கு காரணம், தமிழர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டதுதான். எனவே போரின்போது இடம்பெயர்ந்த தமிழர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தும் செய்த பின்பு அரசியல் மற்றும் உள்ளாட்சி விவகாரங்களில் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்படும் என்று ஐ.நா. குழுவிடம் அதிபர் ராஜபக்சே முன்பே உறுதி அளித்து இருந்தார்.
சமீபத்தில் இந்திய வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை சென்றிருந்தார். அதிபர் ராஜபக்சேவை அவர் சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தார். அப்போது அவரிடமும் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்படும். இதற்காக அரசியல் சட்டத்தின் 13-வது பிரிவில் திருத்தம் செய்யப்படும் என்று ராஜபக்சே உறுதிமொழி அளித்தார்.
எஸ்.எம்.கிருஷ்ணாவுட னான சந்திப்புக்கு பின்னர் பேட்டியளித்த அவர், தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், அரசியல் அமைப்பு சட்டத்தின் 13-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று நான் சொல்வது இது முதல் முறை அல்ல. ஆரம்பத்தில் இருந்தே இதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றே கூறி வருகிறேன் என்றார்.
ஆனால் ராஜபக்சே இப்போது திடீரென பல்டி அடித்துள்ளார். இந்த விஷயத்தில் நான் மட்டுமே முடிவு எடுக்க முடியாது. பாராளுமன்ற தேர்வு கமிட்டிதான் இதை முடிவு செய்ய வேண்டும். பாராளுமன்ற கமிட்டி என்ன சொல்கிறதோ, அதை ஏற்க நான் தயார்.
பாராளுமன்ற தேர்வு கமிட்டிக்கு, தமிழர் கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளின் பெயர்களை தெரிவிக்க வேண்டும். இது எனது சொந்த பிரச்சினை அல்ல. அனைத்து கட்சிகளை யும் உள்ளடக்கியதுதான் பாராளுமன்றம். அது என்ன முடிவு செய்கிறதோ, அதை ஏற்றுக்கொள்ள தயார்.
இவ்வாறு அவர் இப்போது கூறியுள்ளார்.
ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையம், போர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கையிடம் கேட்டிருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள இலங்கை அரசாங்கம், ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் செயல், அரசை தவறு செய்ய தூண்டும் வகையில் அமைந்துள்ளது. எனவே அரசின் அறிக்கையை ஐ.நா. சபைக்கு அளிக்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten