அமைதிக்காக்கும் நடவடிக்கை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் இடம்பெற்றிருப்பது யாவரும் அறிந்த விடையம்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைதிகாக்கும் நடவடிக்கைக்கான ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில் சவீந்திர சில்வா பங்கேற்பது பொருத்தமானது அல்ல என்று குழுவின் தலைவரான லூயிஸ் பிரெசெற் அம்மையார் கூறியிருந்தார். இதனை அடுத்து சவீந்திர சில்வாவை பலரும் புறக்கணித்தனர். இதையடுத்து அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சவீந்திர சில்வா, எதுவும் பேச அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அவருக்கு கூட்டம் தொடர்பான எந்த ஆவணங்களும் வழங்கப்படவில்லை. ஆத்திரமடைந்த அவர் பின்னர் அங்கிருந்து அகன்றார்.
இதேநேரம் �கூட்டம் நடைபெறும் அறைக்குள் சவீந்திர சில்வா நுழைய விடமாட்டேன் என்றும், அவ்வாறு உள்ளே நுழைந்தால் அவரைத் தான் வெளியேற்றுவேன்� என்றும் லூயிஸ் பிரெசெற் அம்மையார் கூறியதாக சிறிலங்கா தரப்பு கூறுகின்றது. �உங்களை ஆசிய நாடுகள் குழு நியமித்திருக்கலாம், ஆனால் நீங்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது நான் தான்� என்றும் அவர் குறிப்பிட்டதாகவும் சிறிலங்கா கூறியுள்ளது. இதுகுறித்து ஐ.நாவுக்கான சிறிலங்கா வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இவ்வாறு நடந்து கொள்வதற்கு பிரெசெற் அம்மையாருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறியுள்ளார்.
அவர் அங்கே இருந்தால் நான் இருக்கபோவது இல்லை என்றும் பிரெசெற் அம்மையார் கடுமையான வார்த்தைகளைப் பிரியோகித்தார் என்றும் இலங்கை குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளை, பிரெசெற் அம்மையாரின் இந்த நடவடிக்கை குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆசிய நாடுகளின் குழுவிடம் முறையிட்டுள்ளது எனவும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
Geen opmerkingen:
Een reactie posten