தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 februari 2012

போரின் இறுதியில் புலிகளால் பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்ட யுவதிகள் !!


தமிழீழ விடுதலைப் புலிகளால் யுத்தத்தின் இறுதி காலங்களில் பலவந்தமாக யுவதிகள் இயக்கத்துக்கு சேர்க்கப்பட்டமை தொடர்பான தகவல்களை கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
புத்திஜீவிகளில் ஒருவரான பாக்கியஜோதி சரவணமுத்துவை நிறைவேற்று பணிப்பாளராக கொண்டு கொழும்பில் இயங்கி வருகின்ற மாற்றுக் கொள்கைக்கான நிலையம் இவ்வீடியோவை வெளியிட்டு உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளால் பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்ட யுவதிகளில் சிலர் சொந்தக் கதைகளை பேட்டியாக சொல்லி இருக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க பெண் போராளிகள் என்று சொல்லி சுமார் 3000 யுவதிகள் சரண் அடைந்தனர்.
இவர்களுக்கு அரசினால் புனர்வாழ்வு வழங்கப்பட்டு வருகின்றது. கணிசமான தொகையினர் புனர்வாழ்வை தொடர்ந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
ஆனால் இவர்கள் சமுதாயத்தில் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது உள்ளது. முகாமில் இருந்தவர்கள் என்பதால் களங்கம் நேர்ந்தவர்களாக சமுதாயத்தால் பார்க்கப்படுகின்றனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதால் அசாதாரணமான இயல்புகள் உடையவர்கள் என்றும் திருமண வாழ்க்கைக்கு உகந்தவர்கள் அல்லர் என்றும் பார்க்கப்படுகின்றனர்
இவர்கள் முன்னாள் புலிகள் என்பதால் எப்போதும் படையினர் மற்றும் பொலிஸாரால் நோட்டமிடப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். ஏதேனும் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுகின்ற முதலில் சந்தேகிக்கப்படுகின்றவர்களில் இவர்களும் அடங்குகின்றனர்.
 வேலையில்லா பிரச்சினை இவர்கள் முக்கியமாக எதிர்கொள்கின்ற சவால்களில் ஒன்று இந்த யுவதிகள் எதிர்கொண்டு வருகின்ற அவல நிலை குறித்து காணொளியில் இவ்வாறு விபரிக்கப்பட்டு உள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten