பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு பொறுப்பற்ற பதிலை சொல்லும் இவர்களை என்ன செய்வது???மறந்துவிட்டாராம்,பதிவு செய்து வைத்திருந்து போட்டு பார்க்கலாமே!!இலங்கையின் வன்னிப்போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன்வந்த விவகாரத்தில், தனது பங்கு தொடர்பாக ஐ.நாவின் மூத்த அதிகாரியான விஜய் நம்பியார் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சவேந்திர சில்வா விவகாரம் தொடர்பாக நேற்று நியூயோர்க்கில் செய்தியாளர் சந்திப்பில் இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளார் விஜய் நம்பியாரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த நம்பியார், “இனப்படுகொலையில் நான் சம்பந்தப்பட்டுள்ளதாக நீங்கள் கூறுவது உங்களில் உள்ள பிரச்சினை. இந்த விவகாரத்தில் மேரி கொல்வின் தொடர்புபட்டிருந்தார். தற்போது அவர் மரணமாகி விட்டார். எனது நிலையை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
சிரியாவில் கடந்தவாரம் கொல்லப்பட்ட பிரித்தானிய ஊடகவியலாளர் மேரி கொல்வின், இலங்கையில் போர் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்த போது என்னுடன் தொடர்பு கொண்டார்.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் சரணடைவதற்கு தரகராக செயற்பட அவர் முனைந்தார். அவர் என்னுடன் பேசினார் என்பது உங்களுக்குத் தெரியும்.“ என்றார்.
அதையடுத்து இன்னர்சிற்றி பிரஸ், “சரணடைவதற்கு சாட்சியாக செல்லும்படி உங்களை கொல்வின் வலியுறுத்தினார் அல்லவா?“ என்று கேட்டது. அதற்கு அவர், ஆம் என்றார்.
அங்கு போகும்படி கேட்கப்பட்டேன். இரண்டுமுறை நான் அமெரிக்க இராஜதந்திரி பொப் பிளேக்குடன் தொடர்பு கொண்டேன். நாம் இருவரும் அங்கு போகத் திட்டமிட்டிருந்தோம்.
கடல் வழியாக அனைத்துலுக செஞ்சிலுவைக் குழுவால் அங்கு போக முடியவில்லை.
இலங்கை அரசாங்கம் எமக்கு அனுமதி மறுத்து விட்டது. எம்மால் கட்டாயப்படுத்த முடியவில்லை. அங்கே எமக்கு வேறு வழி இல்லை.“ என்றார் நம்பியார்.
சரணடைய முயன்றவர்கள் சாட்சிகளின்றிக் கொல்லப்பட்டது குறித்து வெளியில் ஏன் நீங்கள் பேசவில்லை?” என்று இன்னர்சிற்றி பிரஸ் அவரிடம் கேள்வி எழுப்பியது.
அன்று நள்ளிரவு நேரம் மேரி என்னை அழைத்தார். இரண்டு பேர் – அவர்களின் பெயர்களை நான் மறந்து விட்டேன், ஒருவர், சமாதானச் செயலகத்தைச் சேர்ந்தவர் - சரணடைய விரும்புவதாக சொன்னார்.
சுதந்திரமாக சென்று சரணடைவதற்கான உறுதிப்பாட்டைப் பெறுத்தர வேண்டும் என்று கோரினார். நான் சரி என்று சொன்னேன்.
என்னால் அதைச் செய்ய முடியும். அதை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி ஆகியோரிடம் எடுத்துச் சென்றேன்.
சரணடையும் எவரையும் தாம் விரும்புவதாக அவர்கள் கூறினர். அதன்பின்னர் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.“ என்றார் நம்பியார்.
உறுதிமொழியை நீங்கள் பெற்றுக் கொடுத்திருந்தால், அப்போது சாட்சியாக செல்வதற்கு தடுக்கப்பட்டது, நீங்கள் உறுதிமொழி பெற்றுக் கொடுத்தவர்கள் கொல்லப்பட்டது குறித்து ஏன் நீங்கள் வெளியே பேசவில்லை?“ என்று கேள்வி எழுப்பியது இன்னர்சிற்றி பிரஸ்.
பின்னர் அவர்களின் ஆட்களாலேயே அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொன்னார்கள்.
தடங்கல் ஏற்படும் என்று நான் எந்த ஊகத்தையும் கொண்டிருக்கவில்லை. பசில் ராஜபக்ச கூட அதனைச் சொன்னார். கோத்தபாய ராஜபக்ச, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கும் அது முக்கியமானதாக இருந்தது.
அப்போதைய இலங்கை வெளிவிவகாரச் செயலர் பாலித கொஹன்னவுடனும் பேசியிருந்தேன்“ என்று கூறியுள்ளார் நம்பியார்.
அப்போதைய இலங்கை வெளிவிவகாரச் செயலர் பாலித கொஹன்னவுடனும் பேசியிருந்தேன்“ என்று கூறியுள்ளார் நம்பியார்.
Geen opmerkingen:
Een reactie posten