ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய, மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பாக எந்த கருத்துக்களை வெளியிடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன
எனினும், தனது ஆரம்ப உரையில் சிரியாவில் நிலவும் யுத்த நிலைமைகள் குறித்து அவர் கூடிய கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஐ.நாவின் மனித உரிமை பேரவையின் பரிந்துரைகளை உறுப்பு நாடுகள் செயற்படுத்துவதை உறுதிப்படுத்தும் கட்டமைப்பு அவசியம் என நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு இலங்கையிடம் வெளிநாடுகள் கோருவது, இலங்கையில் ஒன்றிணைந்து செயற்படும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கமே என்பதை இலங்கை புரிந்துக்கொள்ள வேண்டும் என பேரவையில், பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் ஜெரோம் பிரவுண் தெரிவித்தார்.
மனித உரிமைகளை உறுதிப்படுத்த நாடுகள் தவறும் போது, மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிறுவனம் செயற்பட்டு, உதவுவது அவசியம் எனவும் அவர் இக்கூட்டத்தொடரில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை பற்றிய பேச்சுக்கள் இடம்பெறும் என, அரசாங்கத் தரப்பு அச்சத்தில் இருந்ததகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten