தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 21 februari 2012

இலங்கையில் ஏற்பட்டுள்ள பெற்றோலிய விலையேற்றதால் அரசு நெருக்கடிக்கள்: அல்ஜசீரா !!!


இலங்கையின் ரூபாயில் ஏற்பட்ட வீழ்ச்சி பெற்றோலிய விலையில் 49 வீத அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இலங்கையில் பாரிய போராட்டங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள தடையும் இலங்கையில் இருதரப்பு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அல்ஜசீரா தொலைக்காட்சியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோலிய விலையேற்றத்தினையடுத்து அரிசி விலையும் உயர்த்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிலோ ஒன்றுக்கு நான்கு ரூபா வீதம் அரசியின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசி விலையை உயர்த்துவதனைத் தவிர வேறு வழியில்லை என அரிசி உற்பத்தியாளர்களும், அரிசி ஆலை உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டால் உற்பத்தியை வரையறுக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, அரிசி ஆலை உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் விலையை அதிகரிக்க அனுமதிக்க முடியாது என நுகர்வோர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten