சவேந்திர சில்வாவை வலயநாடுகளே ஆலோசனைக்குழுவுக்கு பரிந்துரைத்தன!-நவி.பிள்ளைக்கு நொ்ஸிக்கி பதில்
[ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 01:40.39 AM GMT ]
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப்பிரிவின் ஆலோசனைக் குழுவில் சவேந்திர சில்வாவின் பெயரை வலய நாடுகளே பரிந்துரை செய்ததாக ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பதில் பேச்சாளர் மார்ட்டின் நொ்ஸிக்கி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பதில் பேச்சாளர் நொ்ஸிக்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சவேந்திர சில்வா குறித்த படைப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டமையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஆணையாளர் நவநீதம்பிள்ளை செயலாளர் பான் கி மூனுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் நவநீதம்பிள்ளையின் குறித்த கடிதம் கிடைத்ததாகவும் எனினும் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பான பரிந்துரையை வலய நாடுகளே மேற்கொண்டதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பதில் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸிக்கி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சவேந்திர சில்வாவை எவ்வாறு அமைதி காக்கும் படைக்கு நியமிப்பது என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இதனையடுத்தே நவநீதம்பிள்ளை பான் கீ மூனுக்கு கடிதத்தை அனுப்பியிருந்தார்.
அதாவது மனித உரிமை மீறல்களை இழைத்ததாக சந்தேகிக்கப்படுபவர்களின் பட்டியலை நாம் வைத்திருக்கின்றோம். இந்த தனிப்பட்டவர் தொடர்பாக கவலை தெரிவித்து நான் செயலாளர் நாயகத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபை அமைதி காக்கும் பணி தொடர்பான சிரேஷ்ட ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பான மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ள கருத்தை ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதரகம் நிராகத்துள்ளது.
நவநீதம்பிள்ளையின் கருத்து நியாயமற்றதும் ஒழுக்க நெறியை மீறுவதுமாக அமைந்துள்ளதாக தூதரகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten