தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 februari 2012

டக்ளஸ் சுவிஸ் பயணமானார்: அங்கே கைதாவாரா ? -இயக்கமோதலில் புலிகளால் கொல்லப்பட்ட துரோகிகள் யாரப்பா?


ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுத் தலைவரும், ஆயுதக் குழுவை வைத்திருக்கும் நபருமான டக்ளஸ் தேவானந்த நேற்றிரவு சுவிசுக்கு பயணமாகியுள்ளார். ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் இவர் கலந்துகொள்ளவிருக்கிறாராம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சூளைமேட்டில் வைத்து தனது கைத்துப்பாக்கியல் திருநாவுக்கரசு என்னும் தமிழ்ச் சகோதரரை சுட்டு, நடு ரோட்டில் காட்டு மிராண்டித்தனம் காட்டிவர் இந்த டக்ளஸ் தேவானந்தா. இக் குற்றச்செயலுக்காக அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது(சென்னை நீதிமன்றில்). வட கிழக்கில் ஆயுதக் குழுவொன்றை வைத்து மக்களை மிரட்டி தனது காரியங்களைச் சாதித்துவரும் இவர், மனித உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார் என்பது பெரும் நகைப்புக்குரிய விடையமாகும்.

பின்னர் கள்ளமாக மண்ணெண்ணை விற்று பிழைப்பு நடத்திய இவர் தற்போது மகிந்தரின் தயவால் அமைச்சராகவும் இருக்கிறார். பல கொள்ளை கொலை ஆட்கடத்தல் சம்பவத்தோடு இவருக்கு தொடர்புகள் இருப்பதாக பரவலாக பல குற்றச்சாட்டுகள் இவர்மேல் சுமத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் இவர், இன்று மதியம் சுவிஸ் வந்தடைவதாக நம்பகரமான செய்திகள் கசிந்துள்ளது. ஈ.பி.டி.பி என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சியை பிரான்சில் இருந்து ஆரம்பிக்க இவர் முனைப்புக்காட்டி வருவதாக சில உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்ற. புலம்பெயர் நாடுகளில் தற்போது இயங்கிவரும் தொலைக்காட்சிகளை, ஓரம்கட்டி தான் ஆரம்பிக்கவுள்ள தொலைக்காட்சியை முன் நிலைப்படுத்த இவர் பெரும் முடற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்.

சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் எவராவது, டக்ளஸ் தேவானந்தாவின் கும்பலால் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்கள் தாராளமாக சுவிஸ் பொலிசாரிடம் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம். இதனை சுவிஸ் பொலிசார் ஏற்று டக்ளஸ் மீது நடவடிக்கை நேரிடலாம். எனவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இது குறித்து விழிப்படைவது நல்லது ! சென்னை நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிறப்பித்த பிடியாணை, பின்னர் நீதிமன்ற அவமதிப்பு என்பன தொடர்பான ஆவணங்களை சென்னை நீதிமன்றில் இருந்து பெறமுடியும். இதனை ஐ.நா வில் சமர்ப்பித்தால், டக்ளஸ் மனித உரிமை மாநாட்டிற்குச் செல்ல முடியாத நிலை தோன்றலாம்.

Geen opmerkingen:

Een reactie posten