தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 17 februari 2012

அண்ணன், தம்பியின் கூட்டு! தமிழினத்தைக் காக்கவா? கவிழ்க்கவா? - ஈ.பி.டி.பியை முடிக்க காத்திருக்கும் சந்திரசிறியை அடக்கி வைத்திருக்கும் கோட்டா!-manithan?



வடக்கில் செயல்படுகின்ற துணை ஆயுதக் குழுவினரை அடக்குகின்றமைக்கு அம்மாகாணத்தின் ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி போன்ற இராணுவ அதிகாரிகள் தயாராக உள்ளனர்
என்றும் ஆனால் இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் செயல்பாட்டில் தலையிட வேண்டாம் என்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ கண்டிப்பான அறிவுறுத்தல் கொடுத்து இருக்கின்றார் என்றும் அமெரிக்காவுக்கு மிக நம்பிக்கையான வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாண அரச அதிபர் ஆக இருந்த கே. கணேஸ், ஆளுனர் சந்திரசிறி ஆகியோரே இவ்விடயத்தை கொழும்புக்கான அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கின் காதுகளுக்கு போட்டு வைத்து இருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ தளபதிகள் சிலர் குறிப்பாக சந்திரசிறி போன்றவர்கள் துணை ஆயுதக் குழுவினரை அடக்க தயாராக உள்ளனர், ஆனால் துணை ஆயுதக் குழுவினரின் விடயத்தில் தலையிட வேண்டாம், ஏனெனில் சர்வதேச அழுத்தம் காரணமாக இராணுவத்தால் சில செயல்பாடுகளை செய்ய முடியாது, ஆனால் அச்செயல்பாடுகளை துணை ஆயுதக் குழுவினர் செய்கின்றனர் என்று சொல்லி கோட்டாபய ராஜபக்ஸ தடுத்து வைத்திருக்கின்றார் என்று ரொபேட் ஓ பிளேக்கு கணேஸ் சொல்லி இருக்கின்றார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கையில் தலையிட வேண்டாம் என்று பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தி உள்ளார் என்று ரொபேட் ஓ பிளேக்கு ஒப்புக் கொண்டு உள்ளார் சந்திரசிறி.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இவ்விபரங்கள் கிடைத்து உள்ளன.
அண்ணன், தம்பியின் கூட்டு! தமிழினத்தைக் காக்கவா? கவிழ்க்கவா?
நான் கடந்த கால போராட்ட வாழ்க்கையில் சிக்கி விரக்தியடைந்திருந்தபோது அண்ணன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தான் நான் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஊக்கத்தை அளித்தவர் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மண்டபத்தில் பாரம்பரியத்திற்கு மகுடம் எனும் தொனிப்பொருளில் மூலிகைச் செடிகள் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் அவரது அந்த முயற்சியின் பயனாகவே நான் இன்று இந்த மேடையில் உங்கள் முன்பாக வீற்றிருக்கின்றேன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் வடபகுதியில் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த காலங்களில் எதிர்முனையாக இருந்தவர்கள் தற்போது ஒரு மேடையில் உட்காந்து உறவு கொண்டாடுகின்றமையை மக்கள் ஒரு புதுமையாக, ஆச்சரியமாக நோக்குகின்றனர்.

மனித வாழ்க்கையில் பழையதை மறப்பதும், மன்னிப்பதும் ஆண்டவனின் நியதி. இருந்தும் இறைவனின் படைப்பில் இதுவரைக்கும் கீரியும் பாம்பும் ஒன்று சேர்ந்ததாக வரலாறு கிடையாது.

அந்தமாதிரி எதிரிகளாக இருந்தவர்கள் தற்போது அண்ணன், தம்பியாக உருவெடுத்து உறவாடுகின்றனர்.

அதாவது, முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்தவரும் தற்போது இலங்கை அரசாங்கத்தின் பிரதி அமைச்சராக இருப்பவருமான கருணா என்றழைக்கப்படும் முரளிதரனும், ஆயுதம் ஏந்தி தன்னினத்தையே தானே கொன்றொழித்தவர் என்று குற்றஞ்சாட்டப்படுபவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமாகவும், இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராகவும் இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலேயே இந்த அண்ணன், தம்பி உறவு உதயம் பெற்றுள்ளது.

தமிழினத்தை அழித்து, வன்னிப் பெருநிலப்பரப்பில் லட்சக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததாகக் குற்றஞ்சாட்டிப்பட்டு வரும் மகிந்த அரசுடன் ஒட்டி நிற்பவர்களின் இந்த அண்ணன், தம்பி கூட்டு தமிழினத்தைக் காக்கவா? கவிழ்க்கவா? என்ற கேள்விகள் தமிழர்கள் மனங்களில் எழும்பியுள்ளன. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Geen opmerkingen:

Een reactie posten