தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 19 februari 2012

சர்வதேசம்தான் எமக்கு சரியான தீர்ப்பு வழங்க வேண்டும்! (படங்கள் இணைப்பு)!!


தமிழர் தாயகத்தில் சிங்கள பேரினவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையிடம் மார்ச் 5ம் திகதி நீதி கேட்பதற்காக பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் தணியாத தாகத்துடன் தளராத உறுதியுடன் இன்று 14ஆவது நாளாகவும் தொடர்ந்தது.
தற்போது இவர்களுடைய நடைப்பயணம் பிரான்ஸ் நாட்டிற்குள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்று வீதிகளில் பயணித்த மக்களிடம் துண்டுப் பிரசுரங்களையும் அஞ்சல் அட்டைகளையும் விநியோகித்தபடி 31 கிலோமீற்றர் தூரங்கள் நடந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் ஊடகவியளாளர் பலர் இவர்களை சந்தித்து போராட்டத்திற்கான காரணங்களை கேட்டறிந்து நேர்காணலையும் மேற்கொண்டனர்.
இவர்களது நடைப்பயணத்தினை ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் அவதானித்த அந்நாட்டு மக்கள் பலர் இப் போராட்டத்திற்கான சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து சென்றமையும் அவதானிக்க முடிந்தது.
இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் மேற்கொண்ட கோரப் படுகொலைகளை விசாரிப்பதற்கு இராணுவநீதிமன்றம் அமைத்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் நாடகம் ஆடுகின்றது. எனவே சர்வதேசம்தான் எமக்கு சரியான தீர்ப்பு வழங்கவேண்டும் என்று ஐநாசபையிடம் ஒருமித்த குரலில் ஓங்கி ஒலிப்போம் மார்ச் 5ம் திகதி அலைகடல் என திரண்டுவாருங்கள்.

Geen opmerkingen:

Een reactie posten