தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 februari 2012

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்றினாலும் பாதிப்பு இல்லை!- ரணில் (செய்தித் துளிகள்)!!


ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடாத காரணத்தினால் நாட்டின் எவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஆஜர்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி, இராணுவத் தளபதி உள்ளிட்ட எவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஆஜர்படுத்த முடியாது. ஏனெனில், ரோம் பிரகடனத்தில் நான் கைச்சாத்திடவில்லை. இந்த பாதுகாப்பினை நாமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
ஐக்கிய தேசியக் கட்சி எப்போது உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டத்தையே விரும்புகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றினாலும், அதனால் பாதிப்புக்கள் ஏற்படப் போவதில்லை.
ஏனெனில், தீர்மானம் நிறைவேற்றிய போதிலும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பில்லை. தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டாலும், தீர்மானம் தோற்கடிக்கப்பட்டாலும் பிரச்சினை முடிந்ததாக கருத முடியாது. அடுத்த அமர்வுகளில் மீண்டும் மற்றுமொரு தீர்மானம் முன்வைக்கக் கூடும்.
ஆளும், எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த இன்னமும் கால அவகாசம் கோருவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனைத்துகட்சிக் குழு ஒன்றை ஜெனீவா அனுப்பி வைத்திருக்க வேண்டும் - சஜித்
அனைத்துக்கட்சி குழு ஒன்றை ஜெனீவாவிற்கு அனுப்பி வைத்திருக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்களை மட்டும் அனுப்பி வைப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
நாட்டைப் பாதுகாக்கக் கூடிய அனைத்து கட்சிப் பிரதிநிதிகளும் அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளையும் ஜெனீவாவிற்கு அனுப்பி வைத்திருந்தால் அழுத்தங்கள் முறியடிக்க இலகுவாக அமைந்திருக்கும்.
நாட்டை பாதுகாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். கட்சி முரண்பாடுகளை கருதாது நாட்டுக்கு எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட முயற்சி செய்ய வேண்டுமென சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten