தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 februari 2012

கோத்தபாய தொலைபேசியை அமெரிக்கா ஒட்டுக்கேட்டதா ?




2வது வழிமுறை, வழங்குனர் ஊடாக ஒடுக்கேட்ப்பது. அதாவது இலங்கையில் கோத்தபாய டயலக் அல்லது மொபிரெல்லை பாவித்தால் அவர்கள் நிலையத்தில் இருந்து கோத்தபாயவின் உரையாடலை ஒட்டுக்கேட்க்க முடியும். போர் உச்சக்கட்டத்தை எட்டியவேளை, கோத்தபாய மற்றும் சில முக்கிய இராணுவத் தளபதிகளின் மோபைல் போன்கள் இவ்வாறு ஒட்டுக்கேட்க்கப்பட்டதா என்ற சந்தேகங்கள் தற்போது வலுப்பெற்றுள்ளது. காரணம் அந் நிலையங்களில் வேலைசெய்வோர் தமது தலைமைக்குத் தெரியாமல், முக்கிய புள்ளிகளின் உரையாடலைப் பதிவுசெய்தால், பின் நாட்களில் அதனை பாரிய விலைக்கு விற்க முடியும். அதாவது சில இராணுவத்தினர் பொழுது போக்காக எடுத்த போர்குற்ற வீடியோக்களை தற்போது விற்று காசு சம்பாதிப்பது போல இதனையும் ஒருவர் பதிவுசெய்து அமெரிக்காவுக்கு பெருந்தொகைப் பணத்துக்கு விற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இல்லையேல் இப்படிச் செய்யலாம் என்ற ஆலோசனையை, அமெரிக்கா யாராவது ஒரு நபருக்கு கொடுத்திருக்கலாம் எனவும் தற்போது சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்கா தன்னிடம் இதுபோன்ற ஒரு உரையாடலின் பிரதி இருக்கிறது என்பதனை இதுவரை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை, என்பது இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும். ஆனால் சரத் பொன்சேகாவின் விடையத்தில் அமெரிக்கா சற்று எல்லை மீறி தனது சக்தியை பாவித்து வருவதாக தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கோத்தபாய மற்றும் மகிந்தருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இச் செய்தி பரவலாகப் பேசப்படுகிறது. கோத்தபாய புலிகளின் தலைவர்களைச் சுடச் சென்னார் என்பதற்கு அமெரிக்காவிடம் ஆடியோ ஆதாரம் இருக்கிறது என்னும் செய்தி, இவர்களால் பேசப்பட்டு, செல்லவேண்டிய இடத்துக்குச் இச்செய்தி சென்றுள்ளது. இதன் காரணமாகவே சரத் பொன்சேகாவை தான் மன்னிப்பு வழங்கி விட்டு விடுவதாக ரொபேட் ஓ பிளேக்கிடம் மகிந்தர் இரகசியமாகக் கூறியுள்ளார்.

இருந்தாலும் உடனடியாக விடுவிக்க முடியாது என்றும், ஏதாவது நல்ல தினங்களில் இல்லையேல் பண்டிகை நாட்களில் அவரை விடுதலை செய்வதாக மகிந்தர் கூறியுள்ளார். அதாவது அமெரிக்காவிடம் இவ்வாறாக சாட்சியங்கள் இருந்தும் அதனை அது, நல்ல வழியில் பயன்படுத்தவில்லை. மாறாக தன் நலனுக்காவும், அது ஐக்கிய தேசிய கட்சியுடன் கொண்டுள்ள உறவுக்காகவுமே இக் காரியங்களில் ஈடுபட்டுள்ளது என்பது மிகத் தெளிவாக புலனாகிறது. மொத்தத்தில் தன்னிடம் உள்ள சில சாட்சிகளை வைத்து இலங்கையை மிரட்டவே அது முனைப்புக் காட்டி வருகிறது. இதேவேளை இதனை தமிழர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் நல்லதல்லவா ?

அதிர்வுக்காக:

வல்லிபுரத்தான்.


கோத்தபாய தொலைபேசியை அமெரிக்கா ஒட்டுக்கேட்டதா ?

Geen opmerkingen:

Een reactie posten