[ தா.அருணாசலம் ] |
www.puthinappalakai.com மாகாணங்களின் காணி அதிகாரங்களைப் பறிக்கும், சர்ச்சைக்குரிய நகர மற்றும் நாடு திட்டமிடல் கட்டளைத் திருத்தச்ச ட்டமூலத்தில் - தாம் முன்வைத்துள்ள திருத்தங்களை மேற்கொண்டால், அதனை ஆதரிக்கப் போவதாக கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் கூறியுள்ளார். சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருடன் நடத்திய சந்திப்பின் போது, இந்த திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்களை செய்வதறகு சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தான் முன்வைத்த திருத்தங்களை மேற்கொண்டால், திருத்தச் சட்டமூலத்துக்கு அதரவு வழங்கத் தயார் என்றும் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார். திருத்தச் சட்டமூலத்தில் நான்கு பகுதிகளை நீக்குமாறும், இரண்டு பகுதிகளில் திருத்தம் செய்யுமாறும் சந்திரகாந்தன் வலியுறுத்தியுள்ளார். இந்த திருத்தச்சட்ட மூலம் கிழக்கு மாகாணசபையின் ஒப்புதலுக்காக வரும் 27ம் நாள் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மாகாணசபைகளிடம் உள்ள காணி அதிகாரங்களை பறிக்கும் வகையில், தேவைப்படும் காணிகளை மத்திய அரசு சுவீகரிப்பதற்கு இந்த திருத்தச்சட்டமூலம் வழிசெய்கிறது. இதற்கு பல மாகாணசபைகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அனைத்து மாகாணசபைகளினதும் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சிறிலங்கா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் திருத்தச் சட்டமூலம் தென்மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள போதும், வடமத்திய மாகாணசபை இதனை திருத்த முன்மொழிவு ஏதுமின்றி நிராகரித்துள்ளது. மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கூறிவந்த கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன், இந்தத் திருத்தச் சட்டமூலத்துக்கு முன்னதாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். திடீரென அவர் குத்துக்கரணம் அடித்து மாகாணங்களின் காணி அதிகாரங்களைப் பறிக்கின்ற, சிறிலங்கா அரசின் இந்தத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zondag 19 februari 2012
கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் குத்துக்கரணம்!!
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten